இதுவே முதல்முறை.. கடலூரில் கணவர் கலெக்டர் - மனைவி மாநகராட்சி ஆணையர்.. முதல் பெண் ஐஏஎஸ் அனு.. சூப்பர்
கடலூர்: கடலூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.. முதல்முறையாக இப்படியொரு ஆச்சரியம் தங்கள் மாவட்டத்தில் நடந்துள்ளதையடுத்து, கலெக்டர் தம்பதிக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.
தமிழகத்தில் பெரிய நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்களின் கோரிக்கையாகவே இருந்து வருகிறது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளை தரம் உயர்த்துவது குறித்து ஆய்வு செய்வதற்காகவே பிரத்யேக குழு அமைக்கப்பட்டு, நகராட்சிகள், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், கடலூர் நகராட்சியாக இருந்து வந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2022-ம் ஆண்டு நடந்த மாநகராட்சி தேர்தலில், கடலூர் மாநகராட்சியில் முதல் பெண் மேயராக சுந்தரி ராஜா பதவி ஏற்றார்.. இதற்கு பிறகு, கடலூர் நகராட்சி மாநகராட்சியாக மாற்றப்பட்டதால் கலெக்டர் பொறுப்பில் உள்ளவர்கள் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நியமனங்கள்: இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பலர் ஆணையாளராக நியமிக்கப்பட்டனர்.. அதன்படி கடந்த ஆணையராக காந்திராஜ் பொறுப்பில் இருந்து வந்தார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், நேற்றைய தினம், தமிழகம் முழுவதும் மாநகராட்சிக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதன்படி, கடலூர் மாநகராட்சி ஆணையாளராக ஐ.ஏ.எஸ்.பொறுப்பில் உள்ள அனு என்பவரைதமிழக அரசு நியமனம் செய்து அறிவிப்பினை வெளியிட்டிருந்தது..
அந்தவகையில், கடலூர் மாநகராட்சிக்கு முதல் முறையாக ஐஏஎஸ் பொறுப்பில் உள்ள அனு நியமிக்கப்பட்டுள்ளார்.. இதில் இன்னொரு சிறப்பும் அடங்கியிருக்கிறது.
சபாஷ் தம்பதி: கடந்த வாரம், கடலூர் கலெக்டராக இருந்த அருண் தம்புராஜ் இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, புதிய ஆட்சியராக சிபி ஆதித்யா செந்தில்குமார் தமிழக அரசால் அப்போதே நியமிக்கப்பட்டார். கடந்த 19ம் தேதி சிபி ஆதித்யா பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் அவரது மனைவி அனு, கடலூர் மாநகராட்சியிலேயே, புதிய ஆணையாளராக தற்போது நியமிக்கப்பட்டிருக்கிறார்..
அதாவது கடலூரில் கணவர் ஆட்சியராகவும், மனைவி மாநகராட்சி ஆணியராகவும், ஒரே இடத்தில் பணிபுரிவது இதுவே முதல் முறையாகும்... இதனால் கடலூர் மக்கள் மகிழ்ச்சியுடன் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்..
வாழ்த்துக்கள்: முதல்முறையாக பெண் ஐஏஎஸ் அதிகாரியான அனு, தற்போது மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்கிறார்.. இவர் ஏற்கனவே தமிழக அரசின் துணை செயலாளராக பதவி வகித்து வந்தவர் ஆவர்.. கணவர் ஆட்சியராகவும், மனைவி மாநகராட்சி ஆணையராகவும், ஒரே இடத்தில் பணிபுரியும் இந்த செய்தி, சோஷியல் மீடியாவிலும் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications