அண்ணியின் தலையை கூட விடல.. மச்சினன் சொன்ன காரணம் பாருங்க.. கடலூரில் இப்படியொரு ட்விஸ்ட்
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள காட்டுக்கூடலூரில் நடந்த கொலை சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் விலகாத நிலையில், அது குறித்த கூடுதல் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. சமூகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும், குடும்பத் தகராறுகள் மீது நடவடிக்கை எடுப்பதின் அவசியத்தையும், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து எழுப்பி வரும் நிலையில், இந்த கடலூர் சம்பவம் பலரது கவனத்தை பெற்றுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுக்கூடலூர் பகுதியில் வசித்து வரும் தம்பதி கோபாலகிருஷ்ணன், தமிழரசி.. இவர்களுக்கு ஹரிகிருஷ்ணன் (13) மற்றும் ஹரிசக்தி (10) என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்..

ஆனால், கருத்து வேறுபாடுகள் காரணமாக, தமிழரசியை பத்து ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து சென்ற கோபாலகிருஷ்ணன், சென்னையில் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதாக தெரிகிறது.
மச்சினன்கள்
எனினும். கோபாலகிருஷ்ணனின் வீட்டிலேயே தன்னுடைய பிள்ளைகளுடன் தமிழரசி வசித்து வந்தார்.. இதே வீட்டில்தான், கோபாலகிருஷ்ணன் 2 தம்பிகள், பாலகிருஷ்ணன், முருகானந்தம் ஆகியோரும் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில், மச்சினன்கள் 2 பேரும் தனக்கு பாலியல் தொல்லை தருவதாக சிதம்பரம் தாலுகா போலீசில் தமிழரசி சில நாட்களுக்கு முன்பு புகார் தந்தார்.. இதையடுத்து போலீசாரும் விசாரித்து பெண்கள் வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரையும் போலீசார் விசாரணைக்கு உட்படுத்தினர்.

தலை துண்டிக்கப்பட்டது
இதில் மச்சினன்கள் இருவருமே கைதானார்கள். பிறகு ஜாமீனிலும் வெளிவந்துவிட்டனர். ஆனாலும், தங்களை இப்படி போலீசில் மாட்ட வைத்து, ஜெயிலுக்கு அனுப்பி வைத்துவிட்டாரே தமிழரசி என்று இரு மச்சினன்களுமே அண்ணியின் மீது கோபத்தில் இருந்தனர்.
2நாட்களுக்கு முன்பு, பாலகிருஷ்ணன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து, தமிழரசியுடன் இதுகுறித்து கேட்டு தகராறு செய்துள்ளார்.. மேலும் ஆவேசத்தில், அரிவாளால் தமிழரசியின் கழுத்தை வெட்டினார் பாலகிருஷ்ணன்.. அப்போதும் ஆத்திரம் தீராமல் தமிழரசியின் தலையையும் துண்டித்தார்.. இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் தாலுகா போலீசார் பாலகிருஷ்ணனை தனிப்படை வைத்து கைது செய்தனர்.
பிறகு சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு வாக்குமூலததை பாலகிருஷ்ணன் போலீசாரிடம் தந்துள்ளார்..
அதிர்ச்சி வாக்குமூலம்
அதில், "தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டதால், என்னுடைய அண்ணன், அண்ணியை விட்டு சென்றுவிட்டார்.. எனினும் அண்ணன் வாழ்ந்த வீட்டிலேயே அண்ணி தன்னுடைய பிள்ளைகளுடன் தங்கியிருந்தார்.
என்னுடைய மனைவி, குழந்தைகளுடன் பிரிந்து சென்றதற்கு அண்ணி தான் காரணம்,.. அதுமட்டுமல்ல, குடும்ப சொத்தான வீட்டையும் அபகரிக்க தமிழரசி முயற்சி செய்ததாக சொன்னார்..
வீட்டை தன் பெயருக்கு மாற்றி கொள்ள நானும், என்னுடைய சகோதரன் முருகானந்தனும் எதிர்ப்பு தெரிவித்தோம். உடனே பொய்யாக எங்கள் மீது பாலியல் புகார் தந்து ஜெயிலுக்கும் அனுப்பி விட்டார். இதுதான் எங்களுக்கு ஆத்திரத்தை தூண்டியது.. அதனால்தான், அண்ணியை தலையை துண்டித்து கொடூரமாக கொன்றேன்" என்று அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
பொய்யான பாலியல் புகாரை சொல்லி, ஜெயிலுக்குள் தள்ளிய அண்ணியை கொன்றதாக கூறப்படும இந்த அதிர்ச்சி வாக்குமூலம் கடலூரின் கவனத்தை பெற்று வருகிறது...












Click it and Unblock the Notifications