பள்ளிக்கு வர வேண்டாம்.. திறந்த முதல் நாளே சிஇஓ போட்ட எச்சரிக்கை உத்தரவு! பெற்றோர்களே உஷாரா இருங்க!
கடலூர்: கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கும் நிலையில் காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு மற்றும் பொது தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்த நிலையில் 25ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் இல்லாததால் திட்டமிட்டபடி ஜூன் இரண்டாம் தேதியான இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திட்டமிட்டபடி திறக்கப்பட்டன. ஏற்கனவே மாணவர் உள்ளிட்டவை கிட்டத்தட்ட நிறைவடைந்த நிலையில் மாணவர்களை வரவேற்க பள்ளிகள் தயாராக இருந்தது.

பள்ளிகள் திறக்கப்படும் இன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்நாடு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கின்றன. பாடப்புத்தகங்கள் நோட்டு புத்தகங்கள் புத்தகப் பைகள் எழுது பொருட்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும் தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 2004 பள்ளிகளில் பள்ளி திறக்கும் நாளான இன்று புத்தகங்கள் சீருடைகள் உள்ளிட்டவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட பொருள்களை மாணவர்களுக்கு விநியோகம் செய்ய பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
புதிய பேருந்து பயண அட்டைகள் வழங்கும் வரை மாணவர்கள் தங்கள் பழைய பேருந்து பயண அட்டைகளைக் கொண்டு பயணிக்கலாம். விடுமுறை ஆசிரியர் பயிற்சி அட்டவணை உயர் கல்வி வழிகாட்டி முகாம் உள்ளிட்ட விபரங்கள் 2025 2026 கல்வி ஆண்டுக்கான நாள்காட்டியை பள்ளி கல்வித்துறை விரைவில் வெளியிடும். மாணவர்களுக்கு காய்ச்சல் சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அவர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டாம் பெற்றோர் உரிய மருத்துவ உதவியை நாட வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பை பொறுத்து பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," தமிழகத்தில் தற்போது பெரிய அளவில் கொரோனா பாதிப்பு இல்லை. கொரோனா பாதிப்பு அதிகமானால் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். தற்போது எந்த கட்டுப்பாடுகளும் வழிகாட்டு நெறிமுறைகளும் பள்ளிகளுக்கு விதிக்கப்படவில்லை. தற்போதைய சூழலில் பள்ளிகளுக்கு எந்த ஒரு வழிகாட்டு நெறிமுறைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. எண்ணிக்கையை பொறுத்து கட்டுப்பாடுகள் விதிமுறைகள் வழங்கப்படும். அதே நேரத்தில் பாதிப்பு தொடர்பாக சுகாதாரத் துறையுடன் இணைந்து பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications