சிதம்பரம் அருகே அரசு கல்லூரி பேராசிரியர் மீது பயங்கர தாக்குதல்
சிதம்பரம் அருகே அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் மீது முன்னாள் மாணவர்கள் பயங்கர தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் மீது முன்னாள் மாணவர்கள் பயங்கர தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே முட்லூரில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. மகளிர் தினத்தன்று இந்த கல்லூரியில் கலை நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் முன்னாள் மாணவர்களும் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது விசில் அடித்து ஆரவாரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதை பார்த்து கோபம் அடைந்த பேராசிரியர் மணியரசன், முன்னாள் மாணவர்களை வெளியேற சொல்லியிருக்கிறார். இதனால் கோபத்தில் இருந்த முன்னாள் மாணவர்கள் கல்லூரிக்கு வெளியே பேராசிரியர் மணியரசனை சுற்றி வளைத்து கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
முன்னாள் மாணவர்கள் என்று கூறப்படும் சிலர் பேராசிரியர் மணியரசனை தாக்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள். பேராசிரியரை யார் யார் தாக்கினார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணைக்கு பின்னர் தெரிய வாய்ப்பு உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications