சிதம்பரம் அருகே சோகம்.. ஆற்றில் குளித்தவரை மனைவி கண் முன்பே இழுத்து சென்ற முதலை
சிதம்பரம்: சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்த தொழிலாளி ஒருவரை, அவரது மனைவி கண் முன்பே முதலை இழுத்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெராம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயமணி, தனது மனைவியுடன் பழைய கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த முதலை ஒன்று ஜெயமணியை கடித்து இழுத்து சென்றுள்ளது. இதனால் அவரது மனைவி முத்துலெட்சுமி சத்தம் போட்டதை கேட்டு, அங்கு வந்தவர்கள் ஜெயமணியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இரவு நேரம் என்பதால் மாயமான ஜெயமணியை கண்டுபிடிக்க முடியவில்லை. இது பற்றி பேசிய பெராம்பட்டு கிராம வாசிகள், மாலை 6 மணிக்கு மேல் ஆற்றில் ஜெயமணி குளிக்க சென்றதாக கூறினர்.
அந்த சமயத்தில் அவருடன் ஆற்றில் மூன்றுக்கும் மேற்பட்டோர் குளித்து கொண்டிருந்ததாகவும், நீரில் வந்த முதலை ஜெயமணியை கடித்து இழுத்து சென்றுவிட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து 3 மணி நேரம் ஆகியும் அதிகாரிகள் வராததால் கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர்.
இதனிடையே வனத்துறையின் அலட்சியமே தொழிலாளி மாயமானதற்கு காரணம் என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இரவு நேரம் என்பதால் தேடுதல் பணியை தொடர முடியாத நிலையில், தற்போது மீண்டும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. முதலைகளிடம் மனிதர்கள் சிக்கி கொள்வதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications