சிவனேன்னு இருக்கிற சீமானை 'நைசாக' போலீசில் கோர்த்துவிட்ட தம்பிகள்.. எல்லாம் ஃபுல் போதை செய்த மாயம்!
கடலூர்: குடிபோதையில் ரகளை செய்து கொண்டே எங்க அண்ணன் சீமான் வருவான்.. அப்ப தெரியும் எல்லாமே என எகிறிய இரண்டு தம்பிகளை ஆட்டோவில் 'திணித்து' அள்ளி சென்றது விருத்தாசலம் போலீஸ்.
விருத்தாசலத்தில் குடிபோதையில் நடு ரோட்டில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயற்சித்தனர்.

ஆனால் குடிபோதையில் இருந்த இளைஞர்களோ அந்த இடத்தை விட்டு அகன்று செல்லாமல் போலீசாரை வம்புக்கு இழுத்தனர். அத்துடன் போலீசாரை வெறுப்பேற்றும் வகையில் பாம்பு டான்ஸ் ஆடினர். இதனால் கடுப்பாகிப் போகினர் போலீசார்.
அப்போது, குடிபோதை நபர்களில் ஒருவர் ரொம்பவே உரக்க, எங்க அண்ணன் சீமான் வருவான்.. எங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா எங்க அண்ணன் சீமான் வருவான்.. அப்ப தெரியும்.. அப்ப எல்லாமே தெரியும் என சம்பந்தமே இல்லாமல் 'நாம் தமிழர்' பிரமுகர்களைப் போல இரண்டு கைகளை விரித்தும் உயர்த்தியும் முழக்கமிட்டார். இதனால் கொஞ்சம் ஜெர்க் ஆகினர் போலீசார்.

பின்னர் டிராபிக் போலீசார் சிலர் ஒன்று சேர்ந்து சவுண்டு விட்ட ஃபுல் போதை பார்ட்டி தம்பிகளை கழுத்தை பிடித்து ஆட்டோவில் தள்ளிவிட்டனர். ஆனாலும் முரண்டு பிடித்த தம்பிகளுக்கு இரண்டு 'காட்டு' காட்டி ஆட்டோவுக்குள் திணித்து 'இழுத்து' சென்றது போலீஸ்.
குடிபோதையில் ரகளை செய்த தம்பிகள் திடீரென நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெயரை சொல்லி ரகளையில் ஈடுபட்டது அங்கிருந்தவர்களை கடும் அதிர்ச்சி அடைய செய்தது. காவல்நிலையத்தில் 'மதுபோதை' தம்பிகளுக்கு புத்தி தெளியும் வகையில் போலீசார் வகுப்பெடுத்திருப்பார்கள் என்பதை அவர்களது கோபமே வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு லோக்சபா தேர்தலுக்காக கட்சி கட்டமைப்புகளை வலுவாக்கி வருகிறார். ஒவ்வொரு நாளும் காலையில் ஆய்வு, பிற்பகலில் செய்தியாளர் சந்திப்பு, மாலையில் பொதுக் கூட்டம் என ஓடிக் கொண்டே இருக்கும் நிலையில் தம்பிகள் சிலர் இப்படி வீண் வம்பில் அவரை இழுத்துவிடுவது பாவம் இல்லையா? என்பது பொதுமக்களின் கேள்வி.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications