சாவி ஏது? 60 பஸ்கள் எங்கே? எரிந்தது காயலாங்கடை பஸ்கள்! இது கள்ளக்குறிச்சி பள்ளி செட்டப் -வேல்முருகன்
கடலூர்: மாணவி மர்ம மரணமடைந்த கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் பேருந்துகளை தாக்கியது பள்ளி ஏற்பாடு செய்த கும்பலாக இருக்கலாம் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்து உள்ளார்.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் சக்தி இண்டெர்நேஷனல் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இந்த தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த இந்த மாணவி கடந்த 13 ஆம் தேதி இரவு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மாணவி மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்து வந்தனர். இதற்கு நியாயம் கேட்டு மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பெரும் போராட்டமாக இது உருவெடுத்த நிலையில் ஒரு கும்பல் பள்ளியின் வாகனங்களுக்கும், பள்ளி கட்டிடத்துக்கும் தீ வைத்தது.

பலர் கைது
போராட்டக்கார்கள் கற்களை வீசி தாக்கியதில் போலீசாரும் படுகாயமடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக 300 க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. வன்முறைக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று உயிரிழந்த மாணவியின் தாயார் தெரிவித்துள்ள நிலையில், ஒரு கும்பல் திட்டமிட்டு உள்ளே புகுந்து பள்ளியில் தாக்குதல் நடத்தியதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஜாமீன் கோரி மனு
ஒரு வாரத்துக்கும் மேலாக மாணவியின் சடலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கடலூரில் மாணவியின் உறவினர்கள், ஊர் மக்கள் முன்னிலையில் இறுதிச்சடங்கு நடைபெற்றது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சக்தி பள்ளி தாளாளர், அவரது மனைவி, கணித ஆசிரியர், வேதியியல் ஆசிரியர் உள்ளிட்ட 5 பேரும் தங்களுக்கு ஜாமின் கோரி விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தியிடம் மனுத்தாக்கல் செய்தனர்.

வேல்முருகன் பேட்டி
இந்த நிலையில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சகோதரி இறந்திருக்கிறார். அதற்கான நீதிகேட்டு அமைதியான வழியில்தான் போராடினார்கள். அனைவரையும் தமிழ்நாடு முதலமைச்சர் விடுவிக்க உத்தரவிட வேண்டும். பேருந்தை எரித்ததாக சொன்னீர்கள். அதை இன்சூரன்சில் வாங்கிக்கொள்ளலாம். பெஞ்சுகளை எடுத்துச் சென்றதாக கூறினீர்கள். அதையும் திருப்பி தந்துவிட்டார்கள்.

பேருந்து சாவி
இப்போது மாணவியை உயிருடன் கொண்டு வந்து விட முடியுமா? மனிதநேய அடிப்படையில் அரசு உயரதிகாரிகள் அணுக வேண்டும். 66 பேருந்துகள் பள்ளியில் நின்றது. 6 பேருந்துகளை எரித்ததாக சொல்கிறார்கள். மீதமுள்ள 60 பேருந்துகள் எங்கு சென்றன? ஏதோ காயலான் கடை பேருந்தை கொண்டு வந்து நிறுத்தி உள்ளே இருந்த ஆட்களே அடித்து உடைத்திருக்கிறார்கள். பேருந்து சாவி, டிராக்டர் சாவி யாரிடம் இருந்தது? அது மாணவி மரணத்துக்கு நீதி கேட்டவர்கள் செய்த காரியமல்ல. பள்ளிக்கு வேண்டப்பட்ட கும்பல் செய்திருக்கலாம். அந்த கோணத்திலும் காவல்துறை விசாரிக்க வேண்டும்.

மாணவர்களை விடுவிக்க வேண்டும்
பாவம் சாலையில் சென்றவர்கள், நீதி கேட்க வந்தவர்கள் எல்லோரையும் கைது செய்து 17 பிரிவுகளில் வழக்குப்பதிவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் மாணவர்களாக இருந்தால் தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தை அணுகி உடனடியாக விடுவிக்க வேண்டும். ஒரு மாணவியின் உயிர் அவ்வளவு எளிதானதல்ல. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நீதியின் பக்கம் நிற்க வேண்டும். உங்களை மிரட்டுகிற தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்புக்கு துணிச்சல் எங்கிருந்து வந்தது? திறக்க மாட்டோம் என்று சொன்ன பள்ளிகளை அரசுடைமையாக்குங்கள்." என்றார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications