முட்டையை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டவுடன் முட்டைகளை துப்பிய வீடியோ காட்சிகள்
Recommended Video
கடலூர்: அடைகாத்த கோழியை கொன்று விட்டு முட்டைகளை விழுங்கிய பாம்பு, பிடிபட்டவுடன் முட்டைகளை வெளியில் துப்பிய காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
கடலூர் அருகே உள்ள பூலோகநாதர் கோவில் என்ற இடத்தில் பைஜான் என்பவரது வீட்டில் வளர்த்து வந்த கோழி முட்டைகளை அடைகாத்து வந்தது. இன்னும் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவர ஓரிரு நாட்களே இருந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை கோழி கூட்டினுள் புகுந்த பாம்பு கோழியை கொன்றுவிட்டு அங்கிருந்த முட்டைகளை விழுங்கியது. காலையில் முட்டைகளை விழுங்கிய நிலையில் கூண்டுக்குள்ளேயே இருந்த பாம்பை, பண்ணை உரிமையாளர் கண்டார்.
பின்னர் பாம்பு பிடிக்கும் ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் கொடுத்தார். அந்த இடத்திற்கு வந்த செல்லா லாவகமாக அந்தப் பாம்பினை பிடித்தார். தான் பிடிபட்டதை அறிந்த பாம்பு தான் விழுங்கிய மூன்று முட்டைகளையும் அடுத்தடுத்து கக்கியது.

அதன்பிறகு அந்த பாம்பை எடுத்துச் சென்ற செல்லா காப்பு காட்டில் விட்டு சென்றார். பொதுவாக பாம்புகள் சாதாரணமாக கோழிகள் இடும் முட்டையை விழுங்குவது கிடையாது, கோழிகள் அடைகாக்கும் முட்டையை மட்டுமே பாம்புகள் விழுங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications