மாம்பழத்தின் கோட்டையை நசுக்கியவர் விஜயகாந்த்.. தேமுதிக மாநாட்டில் பாமகவை சீண்டிய பிரபல நடிகர்
கடலூர்: ‛‛விருத்தாச்சலம் ஒரு கட்சியின் கோட்டை என்றார்கள். அந்த மாம்பழத்தின் கோட்டையை எல்லாம் கட்சியின் தலைவர் (விஜயகாந்த்) நசுக்கவிட்டார்கள். 2006ல் 61,337 ஓட்டு வாங்கி சட்டசபைக்கு சிங்கம்போல் சென்றார். ஒரு உச்ச நடிகரின் படத்தை அந்த கட்சி ரிலீஸ் செய்ய விடவில்லை. ஆனால் எங்கள் தலைவர் சிங்கத்தின் குகைக்குள் சென்று சிங்கமாக வந்தார். கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் எப்போதுமே கேப்டனின் கோட்டை தான்'' என்று பாமகவை மறைமுகமாக நடிகர் மீசை ராஜேந்திரன் சீண்டினார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவின் அரசியல் மாநாடு கடலூரில் நடந்து வருகிறது.

கடலூர் மாவட்டம் வேப்பூரில் பாசார் கைக்காட்டி தேசிய நெடுஞ்சாலையில் 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0' என்ற.பெயரில் மாநாடு தொடங்கியது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார்.
மாநாட்டில் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் யாருடன் கூட்டணி என்பதை பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்க உள்ளார். இந்த மாநாட்டின்போது பத்திரிகையாளரிடம் நடிகர் மீசை ராஜேந்திரன் பேட்டியளித்தார். அப்போது மீசை ராஜேந்திரன் கூறியதாவது:
மக்கள்உரிமை மாநாடு 2.o இன்று நடக்கிறது. எப்படி சேலத்தில் மக்கள் உரிமை மாநாடு நடத்தி கேப்டன் மாற்றத்தை ஏற்படுத்தினாரோ, அதேபோல் பிரேமலதா விஜயகாந்த்இந்த மாநாட்டை நடத்தி 2026ல் மாற்றத்தை உருவாக்குவார்.
ஒரு தாய்க்கு தெரியும் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்று. எங்களின் இந்த புரட்சி தாய்க்கு (பிரேமலதா விஜயகாந்த்) தெரியும். எங்களின் கட்சியையும், கட்சி தொண்டரையும் எந்த கட்சியில் இணைத்தால் நல்ல வெற்றி கூட்டணி அமையும் என்பது எங்களுக்கு தெரியும்.
2026ல் நாங்கள் எங்கு செல்கிறோமோ? அவர்கள் தான் ஆட்சியை அமைப்பார்கள்.
விருத்தாச்சலம் என்பது ஒரு கட்சியின் கோட்டை என்றார்கள். அந்த மாம்பழத்தின் கோட்டையை எல்லாம் கட்சியின் தலைவர் (விஜயகாந்த்) நசுக்கவிட்டார்கள். 2006ல் 13,777 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.61,337 ஓட்டு வாங்கி சட்டசபையில் சிங்கம்போல் சென்றார். ஒரு உச்ச நடிகரின் படத்தை அந்த கட்சி ரிலீஸ் செய்ய விடவில்லை. ஆனால் எங்கள் தலைவர் சிங்கத்தின் குகைக்குள் சென்று சிங்கமாக வந்தார். கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் எப்போதுமே கேப்டனின் கோட்டை தான்'' என்றார்.
2006ல் விஜயகாந்த், விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் அவர் 61,337 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் பாமக வேட்பாளர் கோவிந்தசாமி 47,560 ஓட்டுகள் பெற்று தோல்வியைடந்தார். அதிமுக 3வது இடத்துக்கு சென்றது. அதிமுக வேடி்பாளர் காசிநாதன் 35,876 ஓட்டுகள் வாங்கியிருந்தார்.
இதன்மூலம் விஜயகாந்த் முதல் முறையாக எம்எல்ஏ ஆனார். விருதாச்சலம் தொகுதி கடலூர் மாவட்டத்தில் உள்ளது. கடலூர் மாவட்டம் பாமகவின் கோட்டை என சொல்லப்படும் சூழலில் அதனை உடைத்து விஜயகாந்த் வெற்றி பெற்றார். அதன்பிறகு இந்த தொகுதியில் 2011 சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் போட்டியிடவில்லை. ரிஷிவந்தியம் தொகுதிக்கு மாறி வெற்றி பெற்றார்.
மேலும் விஜயகாந்தை முதல் முறையாக எம்எல்ஏவாக்கிய விருதாச்சலம் தொகுதியில் கடந்த 2021 சட்டசபை தொகுதியில் தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் களமிறங்கினார். ஆனால் அவர் தோல்வியடைந்தார். 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அவர் மொத்தம் 25,908 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.
அந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 77,064 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் ஜே கார்த்திகேயன் 76,202 வாக்குகள் பெற்று 862 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தார். மீண்டும் கடலூர் மாவட்டத்தை தேமுதிக குறிவைத்துள்ள நிலையில் அங்கு மாநாடு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications