ஓ, கிரைமா நீ.. என்னையே புடிக்கறியா.. சிஐஎஸ்எப் வீரரை கத்தியால் குத்தி.. முட்டிபோட வைத்த கஞ்சா ரவுடி
சிஆர்பிஎப் வீரர்களை கத்தியால் கஞ்சா ரவுடி தாக்கி உள்ளார்
கடலூர்: "என்னையே புடிக்க வர்றியா.. கஞ்சா விக்கிற இடத்துல உனக்கென்ன வேலை? யாருடா இவன்? ஓ.. க்ரைமா நீ.. அதை இந்த வீடியோவுல சொல்லுடா" என்று கஞ்சா ரவுடி ஒருவர், சிஐஎஸ்எப் வீரரை தகாத வார்த்தைகளால் திட்டி.. கத்தியால் குத்தி.. இன்னொரு வீரரையும் முட்டி போடவைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி பதற வைத்துள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் வசித்து வருபவர் செல்வேந்திரன். இவர் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை அதாவது சிஐஎஸ்எப் வீரராக என்எல்சி 2-வது சுரங்கத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலையில் இருந்தபோது, மந்தாரக்குப்பத்தை சேர்ந்த கஞ்சா அங்கே நண்பர்களுடன் வந்துள்ளார்.. சுரங்கப் பகுதிக்குள் நுழைந்து அங்கிருக்கும் காப்பர் கம்பிகளை திருட முயன்றார். அப்போது ரோந்து பணியில் இருந்த செல்வேந்திரன் இதை பார்த்துவிட்டார்.

செல்வேந்திரன்
உடனே மணியை பிடிக்க முயன்றார்.. அப்போது கஞ்சா மணி, கையில் தயாராக வைத்திருந்த கத்தியால் செல்வேந்திரனை குத்திவிட்டு, அங்கிருந்து ஓடினார்.. இதை பார்த்த சக வீரர்கள், செல்வேந்திரனை மீட்டு என்எல்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கஞ்சா மணி
இதனிடையே தப்பிச்சென்ற கஞ்சா மணியை இன்னொரு பாதுகாப்பு படை வீரர் தாஸ் பிடிக்க முயன்றார்.. அங்கிருந்து பைக்கில் கஞ்சா தப்பித்துபோகாமல் இருக்க அந்த சாவியை பிடுங்கி வைத்து கொண்டார்.. இதை பார்த்த கஞ்சாமணிக்கு ஆத்திரம் வந்தது.. கஞ்சாமணியும், நண்பர்களும் தாஸை சுற்றி வளைத்து கொண்டனர்.. கடுமையான தாக்கினர்.

குண்டாஸ்
அங்கேயே கத்தியை காட்டி முட்டி போட வைத்தனர். உடனே தாஸ், "சாரி.. நான் தெரியாம பண்ணிட்டேன்" என்று சொல்ல.. "என்னது, சாரியா? என்னையே புடிக்க வர்றியா.. கஞ்சா விக்கிற இடத்துல உனக்கென்ன வேலை? க்ரைமா நீ? நானே இப்பதான் குண்டாஸ்ல இருந்து வெளியில வந்தேன்.." என்று சொல்லி அசிங்கமாக தாஸை திட்டுகிறார்.

வீடியோ
இந்த சம்பவம் அனைத்தையும், தாஸுடன் சென்ற இன்னொரு வீரர் செல்போனில் வீடியோ எடுத்தார்.. அதை பார்த்ததும் இன்னும் கொதித்துபோன கஞ்சா மணி, அவரையும் கத்தியால் தாக்கினார்.. இதையடுத்து சிஆர்பிஎப் வீரர்கள், சம்பவம் குறித்து மந்தாரக்குப்பம் ஸ்டேஷனில் புகார் தந்துள்ளனர். இந்த வீடியோ கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications