ஐயா நீங்கள் முதல்வரானவுடனே.. ஸ்டாலினிடம் தைரியமாக கோரிக்கைகளை பட்டியலிட்ட சிறுமி!
விருத்தாசலம்: நீங்கள் முதல்வர் ஆனவுடன் எங்கள் ஊருக்கு இதையெல்லாம் செய்ய வேண்டும் என 4 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தனது கோரிக்கைகளை பட்டியலிட்டார்.
Recommended Video
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் மே மாதத்திற்குள் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் போட்டி போட்டு கொண்டு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். திமுக ஊர் ஊராக சென்று உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
இதில் அந்தந்த ஊர்களில் மக்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகளை கேட்டு வருகிறார். அந்த வகையில் இன்றைய தினம் ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலத்திற்கு சென்றார்.

கை கொடுத்த மக்கள்
அங்கு அவர் பேசத் தொடங்கினார். அப்போது அவர் கூறுகையில் இந்த கூட்டத்தில் மக்களை எல்லாம் சந்தித்த போது எல்லாரும் கை கொடுத்தார்கள், என் கன்னத்தை கிள்ளினார்கள். கைகளில் நகங்களால் பிராண்டி ஆங்காங்கே சிறு காயங்கள் உள்ளன. நான் இதற்காக வருத்தப்படவில்லை. இதெல்லாம் அன்பால் செய்தது, பாசத்தால் செய்தது.

மகிழ்ச்சி
இந்த அன்பை மகிழ்ச்சியோடு ஏற்கிறேன். அப்போது இடையில் ஒரு சிறுமி ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம் என அழைத்தார். உடனே என்னம்மா என்றேன், நான் உங்களுடன் பேச வேண்டும் என்றார், சரி பேசு என்றேன், அதற்கு அவர் நான் மைக்கில் பேச வேண்டும் என்றார். இப்போது அந்த சிறுமி சஞ்சனாவை பேச அழைக்கிறேன் என தெரிவித்த ஸ்டாலின் அந்த சிறுமியிடம் மைக்கை கொடுக்கச் சொன்னார்.

விருத்தாசலம் மாவட்டம்
அப்போது அந்த சிறுமி பேசுகையில் இத்தனை கூட்டத்திற்கு மத்தியில் என்னை பேச வைத்ததற்கு நன்றி ஐயா என கூறி தனது பேச்சை தொடர்ந்தார். அவர் கூறுகையில் நீங்கள் முதல்வரானவுடன் எங்கள் விருத்தாசலத்தை மாவட்டமாக ஆக்கி கொடுக்க வேண்டும்.

அரசு மருத்துவமனை
விருத்தாசலத்தை விட சின்ன சின்ன ஊர் எல்லாம் மாவட்டமாக ஆகிவிட்டது. எல்லா வசதிகளும் உள்ள நிலையிலும் எங்கள் ஊர் மாவட்டமாக ஆகவில்லை. நீங்கள் அதை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன். இன்னொரு கோரிக்கையும் இருக்கிறது. எங்கள் ஊரில் உள்ள அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி கொடுங்கள்.

மருத்துவமனை
விருத்தாசலத்தை சுற்றியுள்ள மக்களுக்கு ஒரே மருத்துவமனை இதுதான். இரவு நேரங்களில் மருத்துவர்கள் இருப்பதே இல்லை. விபத்து ஏற்பட்டாலோ, பிரசவ வலி ஏற்பட்டாலோ அந்த மருத்துவமனையில் வசதிகள் இல்லை என கூறி வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகிறார்கள். அந்த மருத்துவமனைகளுக்கு செல்லும் வழியிலேயே அவர்கள் இறக்க நேரிடுகிறது. இதனால் இந்த மருத்துவமனையை நீங்கள் தரம் உயர்த்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் அந்த சிறுமி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications