தந்தையுடன் கடலில் மீன் பிடித்த கோவை மாணவர்.. 34 கிமீ தூரம் தள்ளி கடலூரில் நொறுங்க வைத்த காட்சி
கடலூர்: புதுச்சேரி மாநிலம் பிள்ளைச்சாவடியை சேர்ந்த சிகாமணி என்ற மீனவர் தனது மகன் கிருத்தீசனுடன் சேர்ந்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கோட்டக்குப்பம் பகுதியில் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். சிகாமணி படகில் மீன்பிடித்துவிட்டு திரும்பிய போது படகில் இருந்து கடலில் ஜி.பி.எஸ். கருவி தவறி விழுந்தது. அதை எடுக்க முயன்ற கிருத்தீசன், தந்தை கண் முன்னே கடலில் மாயமானார். சுமார் 4 நாட்களில் 34 கி.மீ. தூரம் தள்ளி, கடலூரில் கிருத்தீசன் உடல் மீட்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் பிள்ளைச்சாவடியை சேர்ந்தவர் சிகாமணி என்பவர் மீனவர் ஆவார். இவரது மகன் கிருத்தீசனுக்கு 19 வயது ஆகிறது. மாணவர் கீர்த்தீசன் கோவையில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் மெரைன் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். அண்மையில் கல்லூரி விடுமுறையில் கிருத்தீசன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி காலை கிருத்தீசன் தனது தந்தையுடன் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார்.

அங்கு மீன்பிடித்து விட்டு இருவரும் கரைக்கு திரும்பினர். அப்போது படகில் இருந்த ஜி.பி.எஸ். கருவி எதிர்பாராதவிதமாக தவறி கடலில் விழுந்தது. இதை பார்த்த கிருத்தீசன், ஜி.பி.எஸ். கருவியை எடுக்க கடலில் குதித்துள்ளார். அப்போது அவர் அலையில் சிக்கி மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிகாமணி, சக மீனவர்கள் உதவியுடன் தேடிப்பார்த்துள்ளார். ஆனால் அவரது மகன் கிடைக்கவேயில்லை. இது குறித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை கடலூர் துறைமுகம் அருகே அக்கரைக்கோரி கடற்கரையில் கிருத்தீசன் உடல் கரை ஒதுங்கியது. கோட்டக்குப்பம் கடலில் கடந்த 29-ந் தேதி விழுந்து பலியான கிருத்தீசன் உடல், கடலூர் துறைமுகம் அக்கரைக்கோரியில் நேற்று கரை ஒதுங்கியுள்ளது. மாணவரின் உடல் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் இருந்து 34 கிலோ மீட்டர் தூரத்துக்கு அடித்து வரப்பட்டு கடலூர் துறைமுகத்தில் கரை ஒதுங்கியது தெரியவந்துள்ளது .












Click it and Unblock the Notifications