சிதம்பரம் லாட்ஜில் காதலன்.. திடீரென மனம் திருந்திய கடலூர் கள்ளக்காதலி.. யாருமே எதிர்பார்க்காத சம்பவம்
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மதுராந்தகநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிதாஸ். கார் டிரைவரான இவர் சிதம்பரத்தில் கள்ளக்காதலியுடன் தனியார் விடுதியில் தங்கியிருக்கிறார். கள்ளக்காதலி தனது 2 குழந்தைகளை அழைத்து வந்திருக்கிறார். இந்நிலையில் அவர், தனது குழந்தைகளை கணவரிடம் விடச்சென்றவர் திரும்பி வரவே இல்லை. இதனால் கள்ளக்காதலன் எடுத்த முடிவு சிதம்பரத்தையே ஆடிப்போக வைத்துள்ளது,
கள்ளக்காதல் விவகாரம் பல குடும்பங்களை நிற்கதியாக்கி வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.சிதம்பரம் அருகே உள்ள மதுராந்தகநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள்குமார் மகன் ஹரிதாஸ்க்கு 26 வயது ஆகிறது. இவர் கார் டிரைவர். சிதம்பரம் சபாநாயகர் தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கடந்த 22-ந் தேதி அறை எடுத்து தங்கினார். இந்த நிலையில் நேற்று காலை வெகு நேரமாகியும் ஹரிதாஸ் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள், அறை கதவை தட்டிப்பார்த்துள்ளார்கள். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருக்கிறது

உடனே லாட்ஜ் ஊழியர்கள், அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மின் விசிறியில் கார் டிரைவர் ஹரிதாஸ் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே லாட்ஜ் ஊழியர்கள் இது குறித்து கடலூர் சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சிதம்பரம் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவானந்தம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கார் டிரைவர் ஹரிதாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் ஹரிதாசுக்கும், மதுராந்தகநல்லூரை சேர்ந்த செல்வராஜ் மனைவி கவியரசி(24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியதும் தெரியவந்தது. கவியரசிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த வாரம் கவியரசி தனது குழந்தைகளுடன் கள்ளக்காதலன் ஹரிதாசுடன் திருப்பூருக்கு சென்றார். அங்கு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களாம்
பின்னர் அங்கிருந்து கடந்த 22-ந் தேதி சிதம்பரத்துக்கு வந்த அவர்கள் அங்குள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். நேற்று முன்தினம் காலை கவியரசி தனது 2 குழந்தைகளையும் முதல் கணவரிடம் விட்டு வருவதாக கூறிச் சென்றுள்ளார். அதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை. இதனால் விரக்தியடைந்த ஹரிதாஸ் தனது லுங்கியால் மின்விசிறியில் தூக்கிட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டது தொியவந்துள்ளது.
கள்ளக்காதலி தன்னுடன் சேர்ந்து வாழ வராததால் மனமுடைந்து அவர் இந்த முடிவினை தேடி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிதாசின் சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications