"தகனம் வேண்டாம்".. கள்ளக்குறிச்சி மாணவி உடலை புதைக்க முடிவு! திடீரென மாற்றம்.. இதுதான் காரணம்!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் இன்று அவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
கள்ளக்குறிச்சியில் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி கடந்த ஜூலை 12ம் தேதி பலியானார். இந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய அளவில் அங்கு கலவரங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் பலியான மாணவியின் உடல் இன்று அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 10 நாட்களாக மாணவியின் உடலை வாங்க பெற்றோர்கள் மறுத்த நிலையில்,கோர்ட் உத்தரவை அடுத்து உடல் மாணவியின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இரண்டு முறை
அந்த மாணவியின் உடல் இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இன்று காலை மாணவியின் உடல் மருத்துவமனையில் இருந்து பெரிய நெசலூர் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. இதில் ஆம்புலன்ஸ் வரும் வழியில் லாரி ஒன்றில் மோதி விபத்துக்கு உள்ளானது. ஆனால் இதில் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. 8.30 மணி அளவில் மாணவியின் உடல் அவரின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாணவி
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி உடலை முதலில் தகனம் செய்யவே முடிவு செய்து இருந்தனர். அவரின் மத வழக்கப்படி உடலை தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக அந்த கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. விறகுகள் வாங்கி ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தது. ஆனால் இன்று காலை அந்த முடிவு கைவிடப்பட்டது.

தகனம் ஏன்?
அதன்படி திடீரென உடலை புதைக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலை அங்கு ஜெசிபி கொண்டு வரப்பட்டது. ஜெசிபி மூலம் அங்கு குழி தோண்டும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. எனவே இன்று உடலை புதைக்க போவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
Recommended Video

விளக்கம்
இது தொடர்பாக அந்த மாணவியின் உறவினர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். மதப்படி தகனம் செய்யவே நினைத்தோம். ஆனால் எங்களுக்கு இறப்பில் சந்தேகம் உள்ளது. பிரேத பரிசோதனையில் எங்களுக்கு திருப்தி இல்லை. நாங்கள் சொன்ன டாக்டரை அனுமதிக்கவில்லை. பிரேத பரிசோதனை ரிப்போர்ட் எப்படி வர போகிறது என்று தெரியவில்லை.

ரிப்போர்ட்
ஒருவேளை ரிப்போர்ட் மீது எங்களுக்கு சந்தேகம் இருந்தால் உடலை மீண்டும் பரிசோதனை செய்ய கோரிக்கை வைப்போம். இதற்காக உடலை புதைக்க முடிவு செய்தோம். தகனம் செய்தால் அதன்பின் பிரேத பரிசோதனை செய்ய முடியாது. அதனால்தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். பிரேத பரிசோதனையில் உண்மை வரும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.. பார்க்கலாம், என்று குறிப்பிட்டு உள்ளனர் மாணவியின் உறவினர்கள்.












Click it and Unblock the Notifications