"பாலியல் தொழிலுக்கு வர்றியா".. வீடியோவை காட்டி கொடூரன் டார்ச்சர்.. எகிறி தப்பி போலீசுக்கு போன மனைவி

பாலியல் தொழிலுக்கு மனைவியை அழைத்த கணவன் மீது புகார் தரப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கணவர் தன்னை பாலியல் தொழிலுக்கு அழைத்து கட்டாயப்படுத்துகிறார் என்று இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் தந்துள்ளார்.

27 வயது ஐஸ்வர்யா.. தமிழகத்தை சேர்ந்தவர்.. அப்பா, அம்மாவை இழந்தவர்.. அதனால், சிறுவயதிலேயே இவரை தத்து கொடுத்துவிட்டனர்.. அந்த வளர்ப்பு தந்தையும் இறந்துவிட்டார்..

இறுதியில் தன் திறமையால் படித்து, சிங்கப்பூரில் வேலை பார்த்தார்.. இவர் ஒரு டான்ஸ் டீச்சர்.. சிறுவர்களுக்கு சிங்கப்பூரிலேயே நடன பயிற்சி தந்துவந்தார்.. இப்போது அபாய வளைவு, வழித்துணை காதலி ஆகிய 2 சினிமாவில் வேலை பார்த்தும் வருகிறார்.

 சிங்கப்பூர்

சிங்கப்பூர்

ஐஸ்வர்யா சிங்கப்பூரில் வேலை பார்த்தபோது, அருண் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.. அருண் ஒரு ஆட்டோ மொபைல் என்ஜினியர்.. கடலூர் மாவட்டம் முடசல் ஓடை கிராமத்தை சேர்ந்தவர்.. ஐஸ்வர்யா பற்றி, தன் பெற்றோரிடம் சொல்லி கடலூருக்கு அழைத்து வந்து முறைப்படி திருமணமும் செய்தார்.

 தனிக்குடித்தனம்

தனிக்குடித்தனம்

ஆனால் 3 மாதத்திலேயே குடும்பத்தில் பிரச்சனை வெடிக்கவும் சென்னையில் தனிக்குடித்தனம் சென்றுள்ளனர்.. பிறகு மறுபடியும் சிங்கப்பூரில் வேலைக்காக அருண் சென்றுவிட்டார்.. தனிக்குடித்தனம் சென்றதில் இருந்தே ஐஸ்வர்யாவை மாமியார் வீட்டினர் தகாத வார்த்தைகளால் பேசி வந்துள்ளனர்.. இதனிடையே சிங்கப்பூரில் இருந்து அருண் ஊர் திரும்பி உள்ளார்..

 மறுப்பு

மறுப்பு

பிறகு ஒருநாள், பாலியல் தொழிலுக்கு வா என்று மனைவியை அழைத்துள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ந்துபோன ஐஸ்வர்யா மறுப்பு தெரிவித்துள்ளார்.. ஆனாலும், தன்னுடைய நண்பர்களிடம் விபச்சாரம் செய்ய கட்டாயப்படுத்தி உள்ளதாகவும், பாலியல் தொழிலுக்காக நண்பர்களிடம் மனைவியை விற்கவும் அருண் முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது.. இந்த விஷயம் கேள்விப்பட்டதும் ஐஸ்வர்யா, பயந்துபோய், மாமியார் வீட்டுக்கு ஓடியுள்ளார்... கணவர் இப்படி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முனைகிறார் என்று கதறியுள்ளார்...

 சித்ரவதை

சித்ரவதை

ஆனால் அந்த வீட்டினரோ, ஐஸ்வர்யாவின் கழுத்தை நெரித்தும், மண்ணெண்ணெய் ஊற்றியும் கொல்ல முயன்றுள்ளனர்.. இதற்கு பிறகு அருண், ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி தன்னுடனே சிங்கப்பூருக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால், அங்குதான் மீண்டும் கொடுமை நடந்துள்ளது.. ஐஸ்வர்யா இரவில் தூங்கினால், டிரஸ் இல்லாமல் வீடியோ எடுத்து மிரட்ட ஆரம்பித்துள்ளார்.. அதற்கு பிறகுதான், இன்னொரு விஷயமும் ஐஸ்வர்யாவுக்கு தெரியவந்துள்ளது..

 பரபரப்பு

பரபரப்பு

கல்யாணம் ஆனதில் இருந்தே, தினமும் தூக்க மாத்திரைகளை தெரியாமல் தந்து, அப்போதிருந்தே இப்படி வீடியோவையும் எடுத்து வைத்துள்ளது தெரியவந்தது. இதனால் நிலைகுலைந்த ஐஸ்வர்யா, அங்கிருக்கும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிங்கப்பூரில் இருந்து தப்பி கடலூர் வந்துவிட்டார்.. இறுதியில் மாவட்ட எஸ்பியையும் சந்தித்து புகார் தந்துள்ளார்.. அருண் பல பெண்களை இப்படி நாசம் செய்துள்ளதாகவும் அந்த புகார் மனுவில் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளதையடுத்து, விசாரணையை கையில் எடுத்துள்ளது போலீஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+