சேலையை கழுத்தில் கட்டி தொங்கவிட்டு.. அப்பா பக்கத்திலேயே என்னையும் புதைச்சிடுங்க.. பெண் கதறல் வீடியோ

கடலூரில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: "அம்மா.. 3 பேரும் கதவை பூட்டிட்டு என்னை அடிக்கிறாங்க.. அந்த பெண்ணை இந்த வீட்டிற்கு கூட்டிட்டு வர போறாங்க.. எனக்கு வாழ பிடிக்கல.. என் பையனை பார்த்துக்கோ.. உன்னை நம்பி தான் அவ னவிட்டுட்டு போறேன்.. என்னை காப்பாத்தினது போல, போல் எப்படியாவது அவனையும் காப்பாத்திடு.. என் உடலை அப்பாவை புதைச்சதுக்கு பக்கத்திலேயே புதைச்சிடு" என்று தற்கொலைக்கு முன்பு இளம்பெண் பேசிய வீடியோ ஒன்று கடுமையான அதிர்ரச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ளது எருமனுார் என்ற கிராமம்.. இந்த கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்.. சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். 24 வயதாகிறது.

இவருக்கு கல்யாணம் ஆகி இரண்டரை வருடமாகிறது.. மனைவி பெயர் ஷோபனா.. ஒன்றரை வயதில் விஷோத் என்ற குழந்தை இருக்கிறான்.

கல்யாணம்

கல்யாணம்

மகள் கல்யாணத்துக்கு 50 பவுன் தங்க நகை, 2 லட்சம் ரொக்கப் பணம், சீர்வரிசை என வீட்டில் செய்திருக்கிறார்கள்.. இப்போது லாக்டவுன் என்பதால் விஜயகுமார் வீட்டில்தான் உள்ளார்.. சமீப காலமாக, இன்னும் நிறைய பணம், நகைகள் வேண்டும் என்று கேட்டு ஷோபனாவை அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார்.

 ஷோபனா

ஷோபனா

இதை தவிர, விஜயகுமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதனால் எதையாவது சாக்கு சொல்லி ஷோபனாவை விரட்டி விடுவதிலேயே குறியாக இருந்திருக்கிறார். இந்நிலையில், நேற்றும் தம்பதிக்குள் பிரச்சனை வெடித்துள்ளது.. அதனால், மனம் உடைந்த ஷோபனா தன் புடவையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சடலம்

சடலம்

தூக்கில் ஷோபனா தொங்குவதை பார்த்த உறவினர்கள் விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் சொன்னார்கள்.. அவர்கள் விரைந்து வந்து சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.. பிறகு விசாரணையை ஆரம்பித்தனர். அப்போதுதான், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஷோபனாவின் வீடியோ சிக்கியது.. சேலையை கழுத்தில் கட்டி தொங்கவிட்டபடியே அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மன்னிச்சிடு

மன்னிச்சிடு

"அம்மா என்னை மன்னிச்சிடுங்க.. வரதட்சணை கேட்டு கணவர், மாமனார், மாமியார் 3 பேரும் கதவை பூட்டிட்டு என்னை அடிக்கிறாங்க.. அந்த பெண்ணை இந்த வீட்டிற்கு கூட்டிட்டு வர போறாங்க.. அதனாலதான் என்னை கொடுமைப்படுத்துகின்றனர். என் பையனை பார்த்துக்கோ.. உன்னை நம்பி தான் அவ னவிட்டுட்டு போறேன்..

 வரதட்சணை

வரதட்சணை

என்னை காப்பாத்தினது போல, போல் எப்படியாவது அவனையும் காப்பாத்திடு.. என்னால உயிர் வாழ முடியல.. என் உடலை அப்பாவை புதைச்சதுக்கு பக்கத்திலேயே புதைச்சிடு.. அப்பா ஆசைப்பட்டது போல் என் உடலையும் உடல் உறுப்பு தானத்திற்கு தந்துடுங்க.. என் சாவுக்கு காரணமானவர்களை சும்மா விடாதீங்க.." என்று அழுது கொண்டே பேசுகிறார். பக்கத்தில் குழந்தை தூங்கி கொண்டிருக்கிறான்.. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும கலக்கத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+