கந்து வட்டி தகராறு.. தந்தை கண் முன்னே மகன் வெட்டிக் கொலை.. தஞ்சையில் பயங்கரம்
கும்பகோணம்: கும்பகோணத்தில் கந்துவட்டி தகராறில் தந்தை கண் முன்னே மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாணாதுறை பத்துக்கட்டு தெருவில் வசித்து வருபவர் சிவசுப்பிரமணியன் (53). அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது மகன் அருண் (22).
இவர் தந்தைக்கு உதவியாக கடையை பார்த்து வந்தார். இந்த நிலையில் குடும்பச் செலவு மற்றும் வியாபார நிமித்தமாகவும் பாமக முன்னாள் நிர்வாகி ஒருவரிடம் ரூ 7 லட்சம் வரை சிவசுப்பிரமணியன் கடன் வாங்கியிருந்தார்.

தொல்லை
ஆனால் கடன் தொகையை திருப்பி கொடுக்க முடியாமல் வட்டியாகவே பல லட்சங்களை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்த பாமக முன்னாள் நிர்வாகியோ கடனை திருப்பி செலுத்துமாறு தொல்லை கொடுத்துள்ளார்.

வாய்த்தகராறு
அதற்கு அருண், எங்களிடம் கந்து வட்டி வாங்கி அசலுக்கு மேல் வட்டியை வசூலித்து விட்டீர்கள். இனிமேல் எங்களால் கடன் தொகையை செலுத்த முடியாது என அருண் கூறிவிட்டார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

சரமாரியாக வெட்டி சாய்த்த கும்பல்
இந்த நிலையில் நேற்றிரவு மளிகை கடையில் தனது தந்தை சிவசுப்பிரமணியத்துடன் அருண் வேலை செய்துக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து அருணை சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர்.

இறப்பு
இதனால் அதிர்ச்சி அடைந்த சிவசுப்பிரமணியன் கூச்சல் போட்டுள்ளார். அப்போது அந்த இருவரும் தப்பி ஓடிவிட்டனர். உயிருக்கு போராடிய அருணை அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.

பரபரப்பு
இதுகுறித்து தகவல் அறிந்து கும்பகோணம் கிழக்கு போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். அருண் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அவரது உறவினர்கள், கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications