லவ் பண்ண மாட்டியா தனலட்சுமி.. முடியாது என மறுத்த பெண்.. கத்தியால் குத்திய சிப்ஸ் கடை சக்திவேல்!

காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர் கைதானார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காதலுக்கு மறுப்பு... பெண்ணை கத்தியால் குத்திய சக்திவேல்

    சிதம்பரம்: தனக்கு கிடைக்காத தனலட்சுமி வேறு யாருக்குமே கிடைக்க கூடாது.. என்று நினைத்த காதலன் இளம்பெண்ணை வீடு புகுந்து கத்தியால் குத்தியுள்ளார்!

    பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி.. 19 வயதாகிறது.. பிளஸ்-2 வரை படித்திருக்கிறர்.. வடமூர் கிராமத்தில் பாட்டி வீட்டில் தங்கி இருக்கிறார்... சிதம்பரத்தில் உள்ள சிப்ஸ் கடை ஒன்றில் வேலையும் பார்த்து வந்தார்.

    உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சக்திவேல் என்ற 23 வயது இளைஞனும் அதே சிப்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார்.. இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தனர். இந்த சமயத்தில் வேறு ஒரு பிரச்சனைக்காக வேலையை விட்டு கடை ஓனர் சக்திவேலை நிறுத்திவிட்டனர்.

     தவிர்த்தார்

    தவிர்த்தார்

    அதனால், சென்னை தாம்பரத்தில் ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்தார் சக்திவேல்.. அங்கிருந்தபடியே தனலட்சுமியிடம் போனில் பேசி உள்ளார். தொடர்ந்து போன் வரவும், பேச்சு ஒரு தினுசாக போகவும், தனலட்சுமி, சக்திவேலுடன் பேசுவதை குறைத்துள்ளார்.. ஒரு கட்டத்தில் தவிர்த்தும் உள்ளார்!

     பாட்டி வீடு

    பாட்டி வீடு

    இதுதான் சக்திவேலுக்கு ஆத்திரத்தை கிளப்பியது.. அதனால் நேரில் போய் என்ன, ஏதென்று கேட்டுவிட்டு வரலாம் என்று கிளம்பி தனலட்சுமியின் பாட்டி வீட்டுக்கு வந்தார். சக்திவேல் வீட்டில் வந்து நிற்பார் என தனலட்சுமி எதிர்பார்க்கவே இல்லை.. எனினும் வீடு தேடி வந்ததால் உட்கார வைத்து பேசிக் கொண்டிருந்தார்.

     திடீர் கத்திகுத்து

    திடீர் கத்திகுத்து

    அப்போது, தன் காதலை தனலட்சுமியிடம் சொன்ன சக்திவேல், நாம் சந்தோஷமாக வாழலாம் என்று சொல்லவும், உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார் தனலட்சுமி. அப்போது வாக்குவாதம் ஆரம்பமானது.. ஒரு கட்டத்தில் தனலட்சுமி தனக்கு கிடைக்க மாட்டார் என்று ஆத்திரமடைந்த சக்திவேல், தயாராக எடுத்து வைத்திருந்த கத்தியால் திடீரென, அவரது கழுத்து, முதுகில் சரமாரியாக குத்தினார்.

     தீவிர சிகிச்சை

    தீவிர சிகிச்சை

    இதில் வலியால் தனலட்சுமி அலறி துடிக்கவும், அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால், அதற்குள் சக்திவேல் தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த தனலட்சுமியை மீட்டு, சிதம்பரம் ராஜா முத்தையா ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. இதனிடையே தப்பி ஓடிய சக்திவேலுவை போலீசார் மடக்கி பிடித்துவிட்டனர்.. இளம்பெண்ணிடம் எதற்காக வெறிச்செயலில் ஈடுபட்டார் என்ற விசாரணை நடந்து வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+