தமிழ்நாட்டுக்கே குஷி.. வரப்பிரசாதமாய் வந்த "பாரத் அரிசி".. வெறும் ரூ.29.. மத்திய அரசின் "பாரத் ரைஸ்"
டெல்லி: சாதாரண நுகர்வோரின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, இப்போதும் ஒரு திட்டத்தை அறிவித்து, அந்த நிகழ்வையும் துவக்கி வைத்திருக்கிறது.
விவசாயிகளின் விளைபொருட்களை மத்திய அரசு கொள்முதல் செய்து நுகர்வோருக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், "பாரத்' பிராண்ட் ஆட்டாவின் சில்லறை விற்பனையை ஆரம்பமாகி உள்ளது.
மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், 'பாரத்' பிராண்டின் கீழ் கோதுமை மாவு (ஆட்டா) விற்பனை செய்வதற்கான 100 நடமாடும் வேன் வாகனங்களைப் டெல்லியில் 2 மாதங்களுக்கு முன்பு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.. இதில் கோதுமை மாவு ஒரு கிலோவுக்கு ரூ. 27.50-க்கு மிகாமல் சில்லறை விலையில் கிடைக்கும்.
பாரத் பிராண்ட்: சாதாரண நுகர்வோரின் நலனுக்காக மத்திய அரசு எடுத்துள்ள தொடர் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். 'பாரத்' பிராண்ட் ஆட்டாவின் சில்லறை விற்பனையைத் தொடங்குவது சந்தையில் மலிவு விலையில் விநியோகத்தை அதிகரிக்கும் என்றே நம்பப்பட்டது... இந்நிலையில், அடுத்த அதிரடியை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.
தற்போது, நாடு முழுவதும் அரிசி விலை உயர்ந்து வருகிறது.. அதாவது இந்த ஒரு வருடத்தில் மட்டும் 15 சதவீதம் அதிகரித்து விட்டது.. அதனால்தான், அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்காக, மலிவு விலையில் அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.. இதற்கு 'பாரத் அரிசி' என்று பெயரிடப்பட்டது.
அறிமுகம்: பாரத் கோதுமையை போலவே, இந்த பாரத் அரிசியையும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிமுகப்படுத்தினார்... 5 கிலோ மற்றும் 10 கிலோ பாக்கெட்டுகளில் பாரத் அரிசி கிடைக்க போகிறதாம்.. கிலோ ரூ.29 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பியூஷ் கோயல் சொல்லும்போது, "மொத்த விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பெரும்பாலான மக்களுக்கு பலன் அளிக்கவில்லை. அதனால், சில்லறை சந்தையில் தலையிட்டுள்ளோம். இந்த அரிசி, நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு பலன் அளிக்கும்.
ருசியாக இருந்தது: ஏற்கனவே 'பாரத் ஆட்டா' என்ற பெயரில் கோதுமை விற்பனையை தொடங்கிய பிறகு கோதுமை விலை குறைந்து விட்டது. அதுமாதிரி, பாரத் அரிசியும் அரிசி விலை குறைவுக்கு வழி வகுக்கும். நான் ஏற்கனவே 'பாரத் ஆட்டா', 'பாரத் பருப்பு' இதெல்லாம் பயன்படுத்தி இருக்கிறேன். நல்ல ருசியாக இருந்தது. இனிமேல், பாரத் அரிசியையும் கண்டிப்பாக பயன்படுத்துவேன்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், மத்திய அரசு அறிமுகப்படுத்திய அடுத்த நாளே, தமிழகத்துக்கு குட்நியூஸ் வந்துள்ளது.. முதற்கட்டமாக தமிழகத்திற்கு, 22,000 டன் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது. அதை விற்க, தேசிய வேளாண் கூட்டுறவு இணையம் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களுக்கு அனுமதியும் தரப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி: இந்த நிறுவனத்தினர் சில தினங்களில்,5, 10 கிலோ மூட்டைகளாக, வேன்களில் எடுத்துச் சென்று, அரிசியை விற்க உள்ளனர்.. ஏற்கனவே, முறையற்ற பருவமழை, குறைவான விளைச்சல், போன்ற காரணங்களினால், அரிசி விலை தாறுமாறாக உயர்ந்து. இப்படிப்பட்ட சூழலில், மத்திய அரசின் பாரத் அரிசி, தமிழக மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications