திடீர் பரபரப்பு.. 1-10 வயது குழந்தைகளை பாதிக்கும் கொரோனா... வார்னிங் தந்த நிபுணர்கள்
3வது அலை பரவல் குழந்தைகளை அதிகம் பாதிக்குமாம்
டெல்லி: வரப்போகும் 3வது அலை பரவலில் 1 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளை கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகையே தன் பிடியில் வைத்து நடுங்க வைத்து கொண்டிருக்கிறது.. இது எந்த மாதிரியான வைரஸ் என்று உறுதியாக இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.. இதன் அறிகுறிகளும் இவைகள்தான் என்று உறுதியாகவும் திட்டமிட்டும் சொல்ல முடியவில்லை.
ஒன்றை கண்டுபிடிப்பதற்குள் இன்னொரு பரிமாணம் தொடங்கிவிடுகிறது.. எனினும் இதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆறுதலாக அமைந்து வருகிறது..

சிகிச்சை
மற்றொரு புறம், இதற்கான சிகிச்சை, மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகளும், டாக்டர்களும், ஆராய்ச்சியாளர்களும் உலகம் முழுவதும் ஈடுபட்டு வருகிறார்கள்.. இந்த தொற்று குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு, அவைகள் குறித்தும் அவ்வப்போது புது புது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன..

எச்சரிக்கை
அப்படித்தான் 3வது அலை இந்தியாவுக்குள் வரப்போவதாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்..அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 3வது அலை பரவல் வந்துவிட்டதாக சொல்கிறார்கள்.. ஏற்கனவே, 2வது அலை பரவலிலேயே இந்தியாவில் ஏராளமான உயிர்களை காவு வாங்கிய நிலையில், 3வது அலை அதைவிட மோசமாகவும், வீர்யம் வாய்ந்ததாகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது..

தடுப்பூசி
முக்கியமாக, குழந்தைகளை 3வது அலை அதிகம் தாக்கும் என்றும் அதனால் குழந்தைகளை பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்க வேண்டும் என்றும் எச்சரிக்கைகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதனால்தான், இந்தியாவில் 3வது அலை தாக்குவதற்கு முன்னரே குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் முறை பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆய்வறிக்கை
இப்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.. 1 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு 3வது அலையில் கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம் அதிகமாக இருக்குமாம். தேசிய கோவிட் அவசர நிலை உத்தி வகுப்புப் பணிக்குழுவின் எம்பவர்டு குரூப் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, 1 முதல் 10 வயதுடைய குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

பாதிப்பு
கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட மொத்த கோவிட் பாதிப்புகளில் 2.80% ஆக இருந்த குழந்தைகள் பாதிப்பு எண்ணிக்கையானது, ஆகஸ்ட் மாதத்தில் 7.04% ஆக அதிகரித்துள்ளது... அதாவது, 100 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் அதில் 7 குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனராம். ஆனாலும் பயப்பட தேவையில்லை என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அதேசமயம், முன்பை விட இப்போது கொரோனா பாதிப்பினால் குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளதாம்.

பெரியவர்கள்
குழந்தைகளில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 57-58% ஆக செரோ சர்வே கூறுகிறது.. பெரியவர்களுக்கு தொற்று பாதிப்பு குறைய குறைய, குழந்தைகளை அது பாதிக்கின்றது என்கிறது ஐசிஎம்ஆர்.. குழந்தைகளை பாதிக்கும் மாநிலங்களில் புதுச்சேரி (6.95%), கோவா (6.86%), நாகாலாந்து (5.48%) அசாம் (5.04%), கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிரா, திரிபுரா, டெல்லி ஆகிய மாநிலங்களில், குழந்தைகளை கொரோனா பாதிப்பதில் தேசிய சராசரியை காட்டிலும் குறைவாகவே பாதிக்கிறது என்கிறது அந்த ஆய்வு.

அதிகரிப்பு
கொரோனா அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும், குழந்தைகளை தேவையில்லாமல் வெளியே நடமாட விட வேண்டாம், என்றும் அறிவுறுத்தியுள்ளனர். மூன்றாவது அலை முடிவுக்கு வரும்வரை, குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications