2 மாதங்களில் 10 தொடர் நிலநடுக்கங்கள்..ரிக்டரில் 4.0 முதல் 6.8 வரை பதிவு- இந்தியாவுக்கு அலாரம்?
இந்தியா, அண்டை நாடுகளில் 2 மாதங்களில் 10 நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன.
டெல்லி: இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் கடந்த 2 மாதங்களில் 10 முறை தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இது ரிக்டரில் 4.0 முதல் 6.8 அலகுகள் வரை பதிவாகி உள்ளன. மிகப் பெரிய நிலநடுக்கம் தொடர்பான முன்னெச்சரிக்கையாக இது இருக்கலாம் என எச்சரிக்கின்றனர் புவியியல் விஞ்ஞானிகள்.
துருக்கி, சிரியாவை தொடர்ந்து உலகின் பல நாடுகள் நிலநடுக்கங்களை தொடர்ந்து எதிர்கொன்டு வருகின்றன. துருக்கி, சிரியாவில் 50,000-க்கும் அதிகமானோரை நிலநடுக்கம் பலி கொண்டது. பல லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். துருக்கி, சிரியாவின் நிலநடுக்க மீட்பு பணிகளில் சர்வதேசம் முழுமையாக இறங்கியது.

இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், ரஷ்யா, தென்கொரியா, ஜப்பான், ரஷ்யா, இந்தியா, இலங்கை என பல நாடுகளில் தொடர்ந்து நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. இந்தியா- நேபாளம் இடையேயான நிலப்பிளவு அதிகரித்துள்ளது; இதனால் இந்தியாவில் மிகப் பெரிய நிலநடுக்கம் எந்த நேரத்திலும் ஏற்படும் என புவியியல் அறிஞர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். குறிப்பாக உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசங்கள் மிக மோசமான நிலநடுகக் பேரழிவை எதிர்கொள்ளும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இதனை உறுதி செய்யும் வகையில் அல்லது முன்னெச்சரிக்கையாகவோ, கடந்த 2 மாதங்களில் மட்டும் 10 தொடர் நிலநடுக்கங்கள் இந்தியா மட்டும் அண்டை நாடுகளில் உணரப்பட்டுள்ளன.
2023 பிப்ரவரி 12: இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.0 அலகுகள் பதிவு
2023 பிப்ரவரி 16 : வங்கதேசத்தின் சதாக் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டரில் 4.3 அலகுகள் பதிவு
2023 பிப்ரவரி 22 : நேபாளத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.8 அலகுகள் பதிவு
2023 பிப்ரவரி 24: பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.1 அலகுகள் பதிவு
2023 மார்ச் 2 : நேபாளத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.0 அலகுகள் பதிவு
2023 மார்ச் 3 : இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.1 அலகுகள் பதிவு
2023 மார்ச் 7 : இந்தியாவின் அந்தமான், நிக்கோபர் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.9 அலகுகள் பதிவு
2023 மார்ச் 8 : பாகிஸ்தானின் கில்ஜி- பல்டிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.0 அலகுகள் பதிவு
2023 மார்ச் 12 : இந்தியாவின் மணிப்பூரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.8 அலகுகள் பதிவு
2023 மார்ச் 21: ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; இந்தியா, பாகிஸ்தான் அதிர்ந்தன; ரிக்டரில் 6.8 ஆக பதிவு
கடந்த பிப்ரவரி 12-ந் தேதி ரிக்டரில் பதிவான நிலநடுக்க அளவு 4.0; ஆனால் நேற்று ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.8 ஆக பதிவாகி இருக்கிறது. மிகப் பெரிய ஒரு நில நடுக்கம் ஏற்படக் கூடிய சாத்தியம் இருப்பதை இந்தியா மற்றும் அன்டை நாடுகளுக்கு உணர்த்தும் முன்னெச்சரிக்கையாக இதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications