டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10% இடஒதுக்கீட்டிற்கு பதிலடி.. சரியான நேரத்தில் காய் நகர்த்திய ராகுல்.. மினிமம் சேலரி திட்டம்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் என்ற வாக்குறுதி தேர்தலில் காங்கிரஸுக்கு பெரிய கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பல நாளாக பிளான் போட்ட பாஜக.. அதிரடியாக அறிவித்த காங்கிரஸ்

    டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் என்ற வாக்குறுதி தேர்தலில் காங்கிரஸுக்கு பெரிய கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பாஜகவின் 10% இடஒதுக்கீடு சட்டத்திற்கு பதிலடியாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

    இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் சமமாக குறைந்தபட்ச வருமானம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இது உடனடியாக நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார்.

    இது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த அறிவிப்பு பாஜக மத்தியில் கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இடஒதுக்கீடு

    இடஒதுக்கீடு

    பாஜக சார்பாக பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு இடஒதுக்கீடு அளிக்க சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட உள்ளது. வருடம் 8 லட்சத்திற்கும் குறைவாக சம்பளம் பெறக்கூடிய உயர் சாதியினர் இதன் மூலம் பயன் பெறுவார்கள்.

    பெரிய பயன்

    பெரிய பயன்

    தேர்தல் நேரத்தில் இது சரியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தேர்தலின் போது உயர் சாதியினர் வாக்குகள் பாஜகவிற்கு அதிக விழும் வாய்ப்புள்ளது. உயர் சாதியினர் இருக்கும் இடங்களில் பாஜக அதிக இடங்களை வெல்ல வாய்ப்பு இருக்கிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

    தற்போது

    தற்போது

    இந்த நிலையில்தான் அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் வழங்கப்படும் என்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வாக்குறுதி அளித்துள்ளார். இது பாஜகவின் இடஒதுக்கீடு அறிவிப்பை ஈடுகட்டும் என்று கூறுகிறார்கள். அதன்முலம் இழந்த வாக்கை விட அதிக வாக்குகளை காங்கிரஸ் இதன் மூலம் பெரும் என்று கூறுகிறார்கள். இதனால் பலன் பெற போகும் மக்கள் காங்கிரசுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது.

    எப்படி உதாரணம்

    எப்படி உதாரணம்

    இதற்கு உதாரணம் கூறலாம்.

    1.ஜாதி ரீதியாக இல்லாமல் ஏழையாக இருக்கும் எல்லோரும் இந்த பணம் கிடைக்கும்.

    2.விரக்தியில் இருக்கும் விவசாயிகள் இதனால் பலன் பெறுவார்கள்.

    3. வேலை இல்லாத இளைஞர்கள் இதனால் பெரிய பலன் அடைவார்கள்.

    4. நடுத்தர வர்க்க மக்கள் இதனால் பயன் அடைவார்கள்.

    இவர்கள் நான்கு பிரிவுதான் 90 சதவிகித வாக்காளர்கள். அதனால் இவர்களின் வாக்கு பெரும்பாலும் காங்கிரஸ் வசம் செல்ல வாய்ப்புள்ளது. இந்த தேர்தல் பாஜக vs காங்கிரஸ் என்பதை தாண்டி 10% இடஒதுக்கீடு vs குறைந்தபட்ச வருமானம் என்று மாறிவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

    English summary
    10% quota vs Minimum Salary: Congress Chief Rahul's bold move gives BJP a real nightmare.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X