’இந்தியா’ கூட்டணியை வச்சு செய்த மோடி! இது ட்ரெய்லர்தான்? இனி மெயின் பிக்சர் இருக்காம்!
டெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் நேற்று பேசிய நரேந்திர மோடி, இந்தியா கூட்டணியை நோக்கி பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். அவரது பேச்சில் பல பஞ்ச் டயலாக்குகள் இடம்பெற்றிருந்தன. அவர் பாயிண்ட் பை பாயிண்ட் பல புள்ளிவிவரங்களை நச் நச் என்று முன்வைத்தார். இந்தியா கூட்டணிக் கட்சிகளைத் தாண்டி அவரது பேச்சில் இடம்பெற்றிருந்த ஹைலைட் விசயங்கள் என்ன?
நேற்று டெல்லி சம்விதன் சதானில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமனதாக நரேந்திர மோடி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதனை அடுத்து அவர் நாளை மாலை பிரதமராகப் பதவியேற்க உள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பீகார் முதல்வர் நிதிஷ்குமார், “இப்போது மட்டுமல்ல; நான் எப்போதும் மோடியுடன்தான் இருப்பேன்” என்று பேசிவிட்டு இருக்கையை நோக்கி அமர வந்த அவர், மோடியின் காலில் விழுந்து வணங்க முயன்றார். ஆனால், அதை மோடி தடுத்துவிட்டார். மேலும் மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்க உள்ள மோடி, தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் மிக நீண்ட ஒரு உரையை நிகழ்த்தினார்.
அப்போது அவர், பாஜகவின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சி வெறும் ட்ரெய்லர் என்று பஞ்ச் டயலாக் அடித்தார். கூடவே 2014, 2019, 2024 ஆகிய மூன்று தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வாங்கியுள்ள மொத்த சீட்டுகளை நாம் இத ஒரே தேர்தலில் பெற்றுள்ளோம்.
ஆனால், எனக்கு ஒன்று புரியவில்லை. காங்கிரஸ் கட்சியினர் ஏன் மகிழ்ச்சியடைகிறார்கள் என்று? நேற்று என்.டி.ஏ கூட்டணிதான் ஆட்சியிலிருந்தது. இன்றும் நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம். நாளையும் நாம் தான் ஆட்சியில் இருக்கப் போகிறோம். பிறகு எப்படி பாஜக தோற்றுவிட்டது என்று எதிர்க்கட்சியினர் பேசுகிறார்கள்?
ஆட்சியில் யார் இருந்தார்கள் என்பதைத்தான் வருங்காலத்தில் பதிவாகப் போகிறது. ஆட்சி அமைப்பதற்குப் பெரும்பான்மை தேவையில்லை. ஒத்த கருத்து இருந்தால் போதும் என்று பேசினார்.
மேலும் கூட்டணிக் கட்சிகளைப் பாராட்டினார். தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் பெற்றுள்ள வாக்கு சதவீதம் நாளை வர உள்ள மாற்றத்தைக் காட்டுகிறது என்று பேசியிருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தக் கூட்டணி என்பது அதிகாரத்திற்காக ஒன்றிணைந்த கட்சிகளின் குழு மட்டுமல்ல, “முதலில் தேசம்” என்ற கொள்கையை உறுதிப்படுத்துவதற்காகக் கூடிய “இயற்கையான கூட்டணி” என்றார்.
இந்தக் கூட்டணிக்கட்சிகளின் கூட்டத்தில் மோடி ஹைலைட் ஆக முன்வைத்த விசயங்கள் என்ன?
#2024 மக்களவை தேர்தல் முடிவுகளைத் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக நான் பார்க்கிறேன். ஆனால் எதிர்க்கட்சிகள் எங்கள் வெற்றியை நிராகரிக்க முயற்சி செய்கின்றன. அதுதான் எனக்கு விளங்கவில்லை.
#என்னைப் பொறுத்தவரை, என்டிஏ என்பது புதிய இந்தியா, வளர்ந்த இந்தியா, அபிலாஷைகளைக் கொண்ட இந்தியா.
#எங்களின் 10 வருட ஆட்சி வெறும் டிரெய்லர். நமது நாட்டின் வளர்ச்சிக்காக நாங்கள் மிகவும் கடினமாகவும் வேகமாகவும் உழைப்போம். அதை நாங்கள் செய்வோம் என்பது மக்களுக்குத் தெரியும்.
#அடுத்த 10 ஆண்டுகளில் என்.டி.ஏ அரசு நல்லாட்சியைத் தரும். வளர்ச்சி நோக்கி கவனம் செலுத்துவோம். சாதாரண மக்களின் வாழ்க்கையை உயர்த்த கவனம் செலுத்துவோம்.
#'சர்வ பந்த் சம்பவ' (அனைத்து மதங்களும் சமம்) என்ற கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
# என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகள் அதிகாரத்திற்காக ஒன்று சேரவில்லை; முதலில் தேசம்தான் முக்கியம் என்ற கொள்கைக்கு உறுதி செய்வதற்காக இணைந்த இயற்கையான கூட்டணி இது.
#இது 'பசுமை யுகம்'. அதை நோக்கி இந்தியா உலகை வழிநடத்த உறுதியேற்போம். பூமி தாய்க்கு மரியாதை அளிக்கும் வகையில் அனைவரும் தங்கள் தாய்மார்களின் பெயரில் மரம் நட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
#ஏழை, நடுத்தர மக்களுக்கு அதிகாரம் அளிப்பது எங்களின் முன்னுரிமையாக இருக்கும். நாங்கள் தொடர்ந்து மக்களின் நலனில் அக்கறை செலுத்துவோம். அதை உறுதி செய்வோம். அனைவருக்கும் தரமான வாழ்க்கையை நாங்கள் வழங்குவோம்.
#எங்கள் அரசாங்கம் கூட்டுறவு மற்றும் கூட்டாட்சியில் நம்பிக்கை கொண்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.
#அனைத்து மாநிலங்களும் முற்போக்கான கொள்கைகளுடன் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்; நாம் உலகம் முடிவதிலுமிருந்து முதலீடுகளுக்கு பெரும் வாய்ப்பு உள்ளது. அதை நோக்கி திட்டங்கள் வகுப்போம்.
#இந்தியா மீதான மரியாதை வளர்ந்துள்ளது. இந்தியாவில் முதலீடுகள் செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை பெரிய அளவில் வளர்ந்து வருகின்றன.
#மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும், தேர்தல் ஆணையத்தையும் கேள்வி கேட்பவர்கள் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமைதி காக்கப்பட்டதுதான் இந்திய ஜனநாயகத்தின் மிகப் பெரிய சக்தி.
#இவிஎம்கள், ஆதார் போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து கேள்வி எழுப்பும் போது, இந்தியா கூட்டணியின் உள்ளவர்கள் முந்தைய நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்று நான் உறுதியாக உணர்ந்தேன்.
#2024 லோக்சபா முடிவுகளை எங்களுக்கு இழப்பு என்று எதிர்க்கட்சிகள் சித்தரிக்க முயன்றன. ஆனால் நம் நாட்டு மக்களுக்கு நாங்கள் ஒருபோதும் தோல்வியடையவில்லை என்பது நன்றாகத் தெரியும்.
#இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏற்கனவே லோக்சபா தேர்தலுக்காக மட்டும்தான் இந்தக் கூட்டணி என்று சொல்ல ஆரம்பித்துவிட்டன. இது அவர்களின் குணாதிசயத்தையும் அதிகாரப் பசியையும்தான் காட்டுகிறது.
#10 ஆண்டுகளுக்குப் பிறகும் காங்கிரஸால் 100 ஐ தொட முடியவில்லை. கடந்த மூன்று மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற மொத்த இடங்கள் இந்த ஒரு தேர்தலில் மட்டும் நாங்கள் பெற்றுள்ள எண்ணிக்கையை விடக் குறைவு என்பதைச் சுட்டிக்காட்ட நான் விரும்புகிறேன்.
#எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவைக்கு வரும்போது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பங்களிப்பு செய்வார்கள் என்று நம்புகிறேன்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications