லவ் ஜிகாத் சட்டத்தை வாபஸ் வாங்குங்க...உ.பி. முதல்வருக்கு, 104 முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கடிதம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லவ் ஜிகாத் சட்டம் என்ற பெயரில் அப்பாவிகளை துன்புறுத்தி வருவதாகவும், இந்த சட்டத்தை திரும்ப பெறுமாறும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத்துக்கு முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 104 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.

ஒரு காலத்தில் கங்கா-யமுனா நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்பட்ட உத்தரபிரதேசம் தற்போது வெறுப்பு, பிளவு மற்றும் மதவெறி அரசியலின் மையமாக மாறிவிட்டதாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பல்வேறு உயர்நீதிமன்றங்கள் லவ் ஜிகாத் தொடர்பான வழக்கில் ஒருவரின் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது அவரவர் உரிமை என கூறியபோதிலும் உத்தரப் பிரதேச அரசு நீதிமன்றங்களை சிறுமைபடுத்தி வருவதாக அந்த கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளனர்.

லவ் ஜிகாத் சட்டம்

லவ் ஜிகாத் சட்டம்

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்தியநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அங்கு இந்து பெண்களை ஏமாற்றி இஸ்லாமிய மதத்தினர் திருமணம் செய்வதைத் தடுக்கும் வகையில் லவ் ஜிகாத் என்ற புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது.

தவறான வழக்குப்பதிவு

தவறான வழக்குப்பதிவு

ஆனால் லவ் ஜிகாத் சட்டம் என்ற பெயரில் அப்பாவிகள் மீது தவறாக வழக்குப்பதிவு செய்யபப்டுவதாக குற்றம் சாட்டபடுகிறது. அங்கு சில நாட்களுக்கு முன்பு 16 வயது சிறுமியுடன் இரவு நேரத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 18 வயதே நிரம்பிய இஸ்லாமிய இளைஞர் மீது லவ் ஜிகாத் சட்டம் பாய்ந்துள்ளது. நண்பர்களாக சாலையில் நடந்து செல்பவர்கள் மீது வேண்டுமென்றே சட்டம் போடுகின்றனர் என அந்த சிறுமியும், வாலிபரும் குற்றம் சாட்டினார். அவர்களின் குடும்பத்தினரும் இந்த சட்டம் தவறாக, தேவையில்லாமல் பயன்படுத்தபடுகிறது என குற்றம்சாட்டி உள்ளனர்.

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கடிதம்

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கடிதம்

இதேபோல் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் லவ் ஜிகாத் சட்டம் என்ற பெயரில் போலி புகார்கள், கைதுகள், வழக்குகள் பதியப்படுவதாக தகவல்கள் வருகின்றன. இந்த நிலையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆத்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ள, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 104 பேர் லவ் ஜிகாத் சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

கடிதம் எழுதினர்

கடிதம் எழுதினர்

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், முன்னாள் வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ், பிரதமரின் முன்னாள் ஆலோசகர் டி.கே.ஏ நாயர் உள்பட 104 முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் யோகி ஆத்யநாத்துக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை இன்று, பிரதமரின் முன்னாள் ஆலோசகர் டி.கே.ஏ நாயர் வெளியிட்டார்.

வெறுப்பின் மையம்

வெறுப்பின் மையம்

அந்த கடிதத்தில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூறியிருப்பதாவது:-
உத்தரபிரதேச அரசு நிறைவேற்றிய சர்ச்சைக்குரிய லவ் ஜிகாத் சட்டம் அந்த மாநிலத்தை வெறுப்பு, பிளவு மற்றும் மதவெறியின் அரசியலின் மையமாக மாற்றியுள்ளது, ஒரு காலத்தில் கங்கா-யமுனா நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்பட்ட உத்தரபிரதேசம் தற்போது வெறுப்பு, பிளவு மற்றும் மதவெறி ஆகியவற்றின் அரசியலின் மையமாக மாறியுள்ளது.

தொடரும் அட்டுழியங்கள்

தொடரும் அட்டுழியங்கள்

அரசின் நிர்வாக நிறுவனங்கள் இப்போது வகுப்புவாதம் என்னும் கொடிய விஷத்தில் மூழ்கியுள்ளன. ஒரு சுதந்திர நாட்டின் குடிமக்கள் தங்கள் வாழ்க்கையை சுதந்திரமாக வாழ விரும்புகிறார்கள். ஆனால் உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள இளம் இந்தியர்களுக்கு உங்கள் அரசு கொடூரமான அட்டூழியங்களை செய்து வருகிறது.

போலி குற்றசாட்டுகள்

போலி குற்றசாட்டுகள்

நீங்கள் நிறைவேற்றிய சட்டவிரோதமான லவ் ஜிகாத் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். லவ் ஜிகாத் சட்டம் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் அப்பாவி பெண்கள், வாலிபர்கள் துன்புறுத்தப்படுகின்றனர். கடந்த வாரம் 16 வயது இந்து சிறுமியை வலுக்கட்டாயமாக மாற்ற முயன்றதாக ஒரு முஸ்லீம் வாலிபர் கைது செய்யபப்ட்டு அவர் ஒரு வாரத்திற்கும் மேலாக சிறையில் உள்ளார். ஆனால் அந்த சிறுமியும், அவரது தாயும் வாலிபர் மீதான குற்றசாட்டுகளை மறுத்துள்ளனர்.

பலிகொடுக்க பார்க்கிறார்கள்

பலிகொடுக்க பார்க்கிறார்கள்

இதுபோன்ற பல அட்டூழியங்கள், உங்களை ஆட்சி பொறுப்பில் அமர்த்திய அப்பாவி மக்களின் கோபத்தைப் பொருட்படுத்தாமல், தடையின்றி தொடர்கின்றன. இந்த லவ் ஜிகாத் சட்டம் முஸ்லீம் ஆண்களையும், தங்கள் விருப்பப்படி வாழ விரும்பும் பெண்களையும் பலிகொடுக்கும் ஒரு குச்சியாகப் பயன்படுத்தப்படுகிறது.

உடனடியாக திரும்ப பெறுங்கள்

உடனடியாக திரும்ப பெறுங்கள்

அலகாபாத் உயர்நீதிமன்றம் உட்பட பல்வேறு உயர்நீதிமன்றங்கள் லவ் ஜிகாத் தொடர்பான வழக்கில் ஒருவரின் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அவரவரின் அடிப்படை உரிமை என்று சந்தேகத்திற்கு இடமின்றி தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும் உத்தர பிரதேச அரசு நீதிமன்றகளையும் மதிக்காமல், அந்த அரசியலமைப்பையும் சிறுமைப்படுத்துகிறது. எனவே லவ் ஜிகாத் சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+