கோடாரியால் தாக்குதல்.. டெல்லியில் 11ம் வகுப்பு மாணவி வெட்டிக்கொலை.. 21 வயது இளைஞர் கைது!
டெல்லி; டெல்லி சவுத் கேம்பஸ் பகுதியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையை செய்த 21 வயது இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி அருகே இருக்கும் சவுத் கேம்பஸ் பகுதியில் நேற்று மதியம் இளம் பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உடனே அப்பகுதி போலீசாருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் அதே பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவி என்று கண்டுபிடிக்கப்பட்டது. பிரவீன் என்ற 21 வயது இளைஞரால் இந்த மாணவி கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பிரவீன்
கடந்த சில மாதங்களாக அந்த மாணவியை பிரவீன் ஒரு தலையாக காதலித்து வந்து இருக்கிறார். காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் கொன்று விடுவேன். உன்னை உன்னுடைய அடுத்த பிறந்தநாளுக்குள் கொன்றுவிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.

மிரட்டல்
பிரவின் வேலையின்றி சுற்றி திரிந்து உள்ளார். அவரின் அப்பா தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார். தொடர் மிரட்டல் காரணமாக கோபம் அடைந்த அந்த மாணவி பிரவீனின் அப்பாவிடம் இது பற்றி முறையிட்டு இருக்கிறார்.

அடி உதை
இதையடுத்து பிரவீனை அவரின் அப்பா அடித்து, உதைத்து கண்டித்துள்ளார். இனி அந்த பெண்ணை தொல்லை செய்ய கூடாது என்று மிரட்டி உள்ளார். இதனால் கோபம் அடைந்த பிரவீன் அந்த மாணவியை நேற்று டெல்லியில் கோடாரியால் வெட்டி கொலை செய்தார்.

தாமதம்
நேற்று மதியம் அந்த மாணவி வெட்டப்பட்ட நிலையில் மிகவும் தாமதமாகவே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.இதனால் சிகிச்சை பலனின்றி மாணவி பலியானார். உடலில் பல இடங்களில் கோடாரி மூலம் மாணவி வெட்டப்பட்டு இருக்கிறார்.

கைது
இதையடுத்து தலைமறைவாக இருந்த பிரவீன் இன்று கைது செய்யப்பட்டார். ஹரியானாவில் உள்ள பல்வால் பகுதியில் தனது அக்காவின் வீட்டில் பிரவீன் தலைமறைவாக இருந்தார். டெல்லி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து பிரவீனை சிறையில் அடைத்துள்ளனர். தலைநகர் டெல்லியில் நடந்த இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications