உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போரில் ஈடுபட்டிருந்த இந்தியர்களில் 12 பேர் பலி! - மத்திய அரசு
டெல்லி: உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் போரில் ஈடுபட்டிருந்த இந்தியர்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 16 பேரை காணவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
கேரளாவை சேர்ந்த 32 வயதான பினில் பாபு என்பவர் ரஷ்யாவில் வேலை தேடி சென்றிருந்த நிலையில், வலுக்கட்டாயமாக உக்ரைன் போருக்கு அவர் அனுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இரங்கலை தெரிவித்திருக்கிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இரங்கலை தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் கூறுகையில், "பினில் பாபுவின் மரணம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவரது சடலத்தை இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறோம். இதற்காக எங்கள் தூதரக அதிகாரிகள் ரஷ்ய தூதரகத்துடன் தொடர்பில் இருந்து வருகிறார்கள். அதேபோல அவருடன் சென்ற மற்றொரு இளைஞரான ஜெயின் குரியன், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்று வருகிறார். அவரை விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்ய ஆயுதபடையில் மொத்தம் 126 பேர் சேர்ந்திருந்தனர். இதில் 96 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீதமிருந்த 30 பேரில் 12 பேர் உயிரிழந்துவிட்டனர். 16 பேரை காணவில்லை. மீதமுள்ள 2 பேரை பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்ப ரஷ்யாவிடம் வலியுறுத்தி வருகிறோம்" என்று கூறியுள்ளார்.
தற்போது உயிரிழந்த பினில் பாபு எலக்ட்ரீஷியனாகவும், படுகாயமடைந்துள்ள அவரது நண்பர் ஜெயின் குரியன் மெக்கானிக்காகவும் கேரளாவில் வேலை செய்து வந்திருக்கின்றனர். ரஷ்யாவில் வேலை இருப்பதாக நம்பிய இவர்கள் முகவர் மூலம் வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். போலந்தில் இவர்களுக்கு வேலை வழங்குவதாக முகவரும் உறுதியளித்திருக்கிறார். ஆனால் இவர்களுக்கு ரஷ்யாவுக்கான விமான டிகெட்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது.
வேலை போலந்தில் என்று சொல்லிவிட்டு, ரஷ்யாவுக்கு எதுக்கு டிக்கெட் கொடுத்திருக்கிறீர்கள்? என்று இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் அப்போதைக்கு முகவர் எதையோ சொல்லி சமாளித்திருக்கிறார்.
மட்டுமல்லாது வேலைக்காக ஏராளமான பணத்தையும் இவர்கள் இழந்திருக்கிறார்கள். இந்நிலையில் இழந்த பணத்தை மீட்க கடந்த ஆண்டு ரஷ்யாவுக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால் ரஷ்யா சென்ற இவர்கள் நேரடியாக போர் முனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்கள். அங்கு ரஷ்ய வீரர்களுக்கு தேவையான ஆயுதங்களை வழங்கவும், பதுங்கு குழிகளை தோண்டவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இறுதியாக பினில் பாபு தனது குடும்பத்தினருடன் ஒரு மாதத்திற்கு முன்னர் பேசியிருக்கிறார்.
தன்னை தீவிர போருக்கு தயாரா சொல்லி வற்புறுத்துவதாகவும், இதுவே குடும்பத்துடன் பேசும் கடைசி அழைப்பாக இருக்கலாம் என்றும் கூட குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளார். இதற்கு முன்னர் திருச்சூரைச் சேர்ந்த சந்தீப் சந்திரன் எனும் இளைஞர் கடந்த ஆகஸ்ட் மாதம் உக்ரைன் எல்லையில் போர் முனையில் கொல்லப்பட்டிருந்தார்.
உக்ரைனுடனான ரஷ்ய போரில் பங்கேற்கும் பெரும்பாலான இந்தியர்கள் வேலைக்காக சென்றுதான் சிக்கிக்கொள்கிறார்கள். அதிக சம்பளம் தருவதாக கூறி இளைஞர்கள் அழைக்கப்படுகிறார்கள். அழைப்பை நம்பி சென்றதும், அங்கு அவர்களின் பாஸ்போர்ட் பிடுங்கப்பட்டு போர் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் அவர்கள் போர் களத்தில் இறக்கிவிடப்படுகிறார்கள்.
இந்தியா மட்டுமல்லாது நேபாளிலிருந்தும், இலங்கையிலிருந்தும் கூட இதுபோன்று இளைஞர்கள் ஏமாற்றப்பட்டு போர் களத்திற்கு அழைத்து செல்லப்பட்டிருக்கின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications