ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு மேலும் 12 சிறுத்தைகள் இன்று வருகை! மொத்த எண்ணிக்கை 20ஆக உயர்வு
இதற்காக இந்திய விமானப்படையின் சி-17 ரக விமானம் கடந்த 16ம் தேதி அந்நாட்டிற்கு விரைந்தது.
டெல்லி: தென்னாப்பிரிக்காவிலிருந்து இன்று(பிப்.18) மத்தியப் பிரதேசத்தின் 'குனோ' தேசிய பூங்காவுக்கு மேலும் 12 சிறுத்தைகள் வந்து சேர்கின்றன. ஏற்கெனவே இந்த பூங்காவில் 8 சிறுத்தைகள் இருக்கும் நிலையில் புதிய சிறுத்தைகள் மூலம் இந்தியாவின் மொத்த சிறுத்தைகளின் எண்ணிக்கை 20ஆக அதிகரிக்கும்.
இந்தியா சுதந்திரமடைந்த கொஞ்ச காலத்திலேயே சிறுத்தைகளும் இந்திய மண்ணை விட்டு மறைந்துவிட்டன. கடைசியாக 1947ம் ஆண்டு சத்தீஸ்கர் மகாராஜாவாக இருந்த ராமானுஜ் பிரதாப் சிங் தியோ மூன்று சிறுத்தைக் குட்டிகளை வேட்டையாடினார். இதனையடுத்து சிறுத்தைகளின் நடமாட்டம் எங்கும் காணப்படவில்லை. இதனையடுத்து கடந்த 1952ம் ஆண்டு அப்போதைய நேரு அரசாங்கம் இந்தியாவிலிருந்த மொத்த சிறுத்தைகளும் அழிந்துவிட்டதாக அறிவித்தது.
அதற்கு முன்னர் வரை சிறுத்தைகள் நன்கு செழித்து வளர்ந்ததா? என்று கேட்டால் கிடையாது என சொல்லலாம். மேற்குறிப்பிட்டதைப் போல இந்திய மகாராஜாக்கள் தங்களின் வீரத்தை பறைசாற்ற சிறுத்தைகளை கொன்று குவிக்க தொடங்கினர். மறுபுறம் மக்கள் தொகை பெருக்கம், வேட்டையாடும் நிலப்பரப்பு சுருங்கி போனது, போட்டி விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவை சிறுத்தைகளின் வாழ்வை விளிம்பு நோக்கி வேகமாக நகர்த்தியது.

70 ஆண்டுகளுக்கு பிறகு
இந்நிலையில் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் மீண்டும் சிறுத்தைகள் கொண்டுவர திட்டமிடப்பட்டது. இதற்காக தென்னாப்பிரிக்காவுடன் ஒப்பந்தமும் போடப்பட்டது. ஒப்பந்தத்தையடுத்து தென்னாப்பிரிக்காவிலிருந்து நிபுணர்கள் குழு ஒன்று கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் குனோ பூங்காவுக்கு வந்து ஆய்வு நடத்தியது. ஆய்வின் முடிவுகள் திருப்திகரமாக இருந்த நிலையில், தென்னாப்பிரிக்காவிலிருந்து 8 சிறுத்தைகள் இந்தியா வந்து சேர்ந்தன. இந்த சிறுத்தைகளை அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த குனோ தேசிய பூங்காவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி தனது 72வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக திறந்து வைத்தார்.

ஆரோக்கியம்
இந்த சிறுத்தைகள் வாரத்திற்கு மூன்று முதல் நான்கு நாட்கள் வரை வேட்டையாடி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறது. இந்திய மண் மற்றும் காலநிலையை நன்கு புரிந்துக்கொண்டு அதற்கேற்றார் போல வாழ பழகிக்கொண்டது. இப்படி இருக்கையில் அடுத்த பேட்ஜ்ஜாக 12 சிறுத்தைகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா கொண்டுவரப்படுகிறது. இதற்காக இந்திய விமானப்படையின் சி-17 ரக விமானம் கடந்த 16ம் தேதி அந்நாட்டிற்கு விரைந்திருக்கிறது.

புதிய சிறுத்தைகள்
இந்த விமானம் 12 சிறுத்தைகளை ஏந்திக்கொண்டு இன்று நாடு திரும்புகிறது. ஏற்கெனவே 8 சிறுத்தைகளுக்கு குனோ பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் இந்த சிறுத்தைகளுக்கும் 10 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் தென்னாப்பிரிக்காவின் தேசிய பல்லுயிர் நிறுவனம், தேசிய பூங்காக்கள், அழிந்து வரும் வனவிலங்கு அறக்கட்டளை ஆகியவற்றுடன் இந்தியாவின் வனவியல், மீன்வளத்துறை மற்றும் சுற்றுச்சூழலியல் துறையால் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவுக்கும்-தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே இது குறித்து கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சூழல்
இந்தியாவிற்கு 70 ஆண்டுகளுக்கு பின்னர் சிறுத்தைகள் வந்தாலும், இந்திய சூழலுக்கு முழுவதுமாக இச்சிறுத்தைகள் ஒன்றிபோகுமா? என்று கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆப்பிரிக்காவை போல இந்தியா வறட்சியான பூமி கிடையாது. பருவமழை ஓராண்டு தவறினாலும் அதற்கடுத்த ஆண்டு குறிப்பிட்ட அளவு பெய்துவிடும். எனவே இச்சிறுத்தைகள் கனமழையையும், அதனால் ஏற்படும் நோய் தொற்றையும் எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications