ராஜ்யசபாவில் இருந்து 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட்- கடந்த கூட்டத் தொடரில் அமளியில் ஈடுபட்டதால் நடவடிக்கை!
டெல்லி: ராஜ்யசபாவில் இருந்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் 12 பேர் நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் தொடர் அமளியில் ஈடுபட்டதால் 12 எம்.பிக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது பெகாசஸ் ஒட்டு கேட்பு, விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு உள்ளிட்டவைகளை முன்வைத்து இரு சபைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்ற இரு சபைகளும் முடக்கப்பட்டன.

ராஜ்யசபாவில் அமளி
ராஜ்யசபாவில் அமைச்சர்களின் பதிலுரை அறிக்கைகளை கிழித்து எறிந்தும் எம்.பிக்கள் கோஷம் எழுப்பினர். இதனால் தொடர் அமளியில் ஈடுபடும் எம்.பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

விவசாய சட்ட ரத்து மசோதா நிறைவேற்றம்
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கூடியது. இன்றும் லோக்சபா, ராஜ்யசபாவில் கடுமையான அமளி நிலவியது. இந்த அமளிகளுக்கு நடுவே மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா, இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டது. பிற்பகலுக்குப் பின்னர் லோக்சபா நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

12 எம்.பிக்கள் சஸ்பெண்ட்
மேலும் ராஜ்யசபாவில் விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா நிறைவேற்றப்பட்ட பின் 2 முறை சபை நடவடிக்கைகள் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டன. இதன் பின்னர் மாலை 3.09 க்குப் பின் கூடிய ராஜ்யசபாவில், கடந்த கூட்டத் தொடரில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபையை நடத்திய ராஜ்யசபா துணைத் தலைவர் அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சபை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

சஸ்பெண்ட் எம்.பிக்கள்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்: இளமாறம் கரீம் (சிபிஎம்), பூலோ தேவி நீதம், சஹாய வர்மா, போரா, ராஜாமணி படேல், சையத் நசீர் ஹூசைன், அகிலேஷ் பிரசாத் சிங் (காங்கிரஸ்), பினோய் விஸ்வம் (சிபிஐ), தோலா சென், சாந்தா சேத்ரி (திரிணாமுல் காங்கிரஸ்), அனில் தேசாய்- சிவசேனா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தற்போது எதிர்க்கட்சி எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரமும் வரும் நாட்களில் லோக்சபா, ராஜ்யசபா இரு சபைகளிலும் கடுமையாக எதிரொலிக்க வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications