டெல்லியில் பசங்களுக்கும் பாதுகாப்பு இல்லை.. 12 வயது சிறுவன் கூட்டு பலாத்காரம்.. கொடூர தாக்குதல்!
டெல்லி: தலைநகர் டெல்லியில் 12 வயது சிறுவன் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சில வட மாநிலங்களில் பாலியல் குற்றங்கள் சமீப காலங்களில் அதிகரித்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதுவும் மைனர்களை குறி வைத்து நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

பலாத்காரம்
பெரும்பாலும் பாலியல் பலாத்கார சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரிந்த நபர்களே குற்றவாளிகளாக இருக்கின்றனர். வெளியே சொல்ல மாட்டார்கள் என் தைரியத்திலேயே மனித மிருகங்கள் இதுபோன்ற பாலியல் பலாத்கார சம்பவங்களில் ஈடுபடுகின்றன. இதில் பாதிக்கப்படும் நபர்கள் துணிச்சலாகப் புகார் அளிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு வழிகளை ஏற்படுத்தி உள்ளன.

சிறுவன்
இதற்கிடையே தலைநகர் டெல்லியில் மைனர் சிறுவன் ஒருவன் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புது டெல்லி பகுதியில் 12 வயது சிறுவனை நான்கு பேர் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் நில்லாமல் அந்த சிறுவனை இரும்பு தடிகளைக் கொண்டு கொடூரமாகத் தாக்கி உள்ளனர். பின்னர் அப்படியே ரோட்டில் சாக விட்டு விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

புகார்
இந்தச் சம்பவத்தைத் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால், "டெல்லியில் சிறுவர்கள் கூட பாதுகாப்பாக இல்லை" என்று ட்வீட் செய்துள்ளார். சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருவதாகவும் இது தொடர்பாக மகளிர் ஆணையம் சார்பில் டெல்லி போலீசில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் ஸ்வாதி பாலிவால் தெரிவித்தார்.

பாதுகாப்பு இல்லை
சுவாதி பாலிவால் தனது ட்விட்டரில், "தலைநகர் டெல்லியில், பெண்களை விடுங்கள், ஆண் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பில்லை. 12 வயது சிறுவன் நான்கு பேரால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டான். பாதி உயிரிழந்த நிலையில், ரோட்டிலேயே விடப்பட்டான். இந்தச் சம்பவம் குறித்து போலீசில் வழக்குப்பதிவு செய்துள்ளோம்.

ஒருவர் கைது
இதுவரை, இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த விவகார்தில் தலைமறைவாக உள்ள மூன்று பேர் போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு மகளிர் குழு நோட்டீசும் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications