11 பெண்கள், 6 டாக்டர், 5 இன்ஜினியர், 13 வக்கீல், 7 முனைவர்கள்.. அமைச்சரவை பட்டியலில் என்ன ஸ்பெஷல்?
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், 13 பேர் வழக்கறிஞர்கள், ஆறு மருத்துவர்கள், இந்தியக் குடிமைப் பணியிலிருந்த ஏழு பேர், உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையில் பாஜக 2ஆவது முறையாகக் கடந்த 2018ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த பிறகு, கடந்த 2 ஆண்டுகளாக அமைச்சரவையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், மோடி அமைச்சரவை முதல் முறையாக இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த ஹர்ஷ் வர்தன், பாபுல் சுப்ரியோ உள்ளிட்ட 14 பேர் ராஜினாமா செய்தனர்.

43 புதிய அமைச்சர்கள்
அதைத் தொடர்ந்து இன்று புதிதாக அமைச்சர்களாகப் பதவியேற்கும் 43 பேர் கொண்ட பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் அடுத்தாண்டு தேர்தல் நடைபெறும் உத்தரப் பிரதேசத்திற்கு அதிக அமைச்சர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் இருந்து மொத்தம் எட்டு பேர் அமைச்சர்களாகியுள்ளனர். அதேபோல குஜராத்தில் இருந்து 6 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்.

13 வழக்கறிஞர்கள்
மேலும், இன்று புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களில் 13 பேர் வழக்கறிஞர்கள். மேலும், ஆறு மருத்துவர்கள், ஐந்து பொறியாளர்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இது தவிர இந்தியக் குடிமைப் பணியிலிருந்த ஏழு பேர், முனைவர் பட்டம் பெற்ற ஏழு பேர் ஆகியோருக்கும் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

பெண்கள்
இன்று அமைச்சர்களாகப் பதவியேற்பவர்களில் மூன்று பேர் வணிகம் பிரிவில் பட்டம் பெற்றவர்களாகும். அமைச்சரவை சாதிகள் மற்றும் மதங்களையும் வெட்டுகிறது. மேலும், மத்திய அமைச்சரவையில் 9 மாநிலங்களில் இருந்து மொத்தம் 11 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். 50 வயதுக்குக் குறைவான 14 பேருக்கும் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர்கள்
அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் சர்பானந்த சோனோவால், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் நாராயண் ரானே ஆகியோருக்கும் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்லாமியர் ஒருவர், கிறிஸ்துவர் ஒருவர், புத்த மதத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கும் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications