லடாக் மோதல்: மால்டோவில் இந்தியா-சீனா இடையே நடந்த பேச்சுவார்த்தை நிறைவு.. ஆலோசிக்கப்பட்டது என்ன
டெல்லி: லடாக் எல்லை மோதல் காரணமாக இந்திய சீன ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையே சனிக்கிழமை நடைபெற்ற 13 ஆவது கட்ட பேச்சுவார்த்தை மாலை 7 மணியளவில் முடிந்தது.
லடாக்கின் கிழக்கு பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவம் அத்துமீறியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஜூன் மாதம் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இதையடுத்து இந்தியாவும், சீனாவும் தலா 50 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்களை எல்லையில் குவித்ததால் பதற்றம் நீடித்து வந்தது. இதனால் வடபகுதியில் காரகோரம் அருகே தாலட் பெக் ஓல்டி இந்திய சோதனை சாவடி, தேப்சாங் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் வழக்கமாக மேற்கொள்ளும் ரோந்து பணிகளை இந்திய ராணுவத்தினர் செய்ய முடியாத நிலையில் ஏற்பட்டது.
இந்த பதற்றத்தை தணிக்க இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து எல்லையில் உள்ள பாங்கோங் சோ ஏரி கரை பகுதி மற்றும் கோக்ரா பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் இரு தரப்பும் படைகளை திரும்ப பெற்றன. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 12 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.கடைசியாக நடந்த 12 ஆம் கட்ட பேச்சுவார்த்தையின் போது கோக்ரா பகுதியில் இருந்து இந்தியாவும் சீனாவும் ராணுவத்தை விலக்கிக் கொண்டது. இரு நாடுகளுக்கு இடையேயான 13 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று மால்டோ எல்லையில் நடந்தது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை 8 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்றது.
இரு நாடுகளுக்கு இடையே சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை மாலை 7 மணியளவில் நிறைவடைந்தது. இதில் என்ன ஆலோசிக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.
லடாக் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சீன பகுதிக்குள் அமைந்துள்ள மோல்டோ பகுதியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் லே ஐ மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 14ஆவது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி. கே.மேனன் தலைமையிலான அதிகாரிகள் இந்தியா சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
அது போல் சீனாவின் தெற்கு ஜின்ஜியாங் ராணுவ பகுதியின் கமாண்டர் மேஜர் ஜெனரல் லியூ லின் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். கடந்த வாரம் அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் இந்திய- சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. உத்தரகாண்ட் பகுதியில் உள்ள பராஹோட்டி பகுதியில் கடந்த ஆகஸ்ட் இறுதியில் 100- க்கும் மேற்பட்ட சீன படையினர் ஊடுருவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications