Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ளத்தில் மிதக்கும் ஆந்திரா! இன்று 21 ரயில்கள் ரத்து.. 10 ரயில்கள் மாற்று பாதையில் இயக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. வெள்ளத்தில் தண்டவாளங்கள் மூழ்கியுள்ள நிலையில், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. இன்று 21 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. அதேபோல 10 ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறது.

ஆந்திரா, தெலங்கானாவில் பெய்த தொடர் மழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. மெஹபூபாபாத், நல்கொண்டா, வாரங்கல், ஆந்திராவில் என் டி ஆர், கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நேற்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர். குறிப்பாக விஜயவாடாவில் 20 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அதிகளவில் மழை பெய்து இருப்பதால் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது.

andhra telangana train

இதற்கிடையே மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற எதற்காகவும் வெளியே வரவேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ளவர்களை மீட்க தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளம் காரணமாக நேற்று மட்டும் சுமார் 140 ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. 97 ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டிருக்கின்றன. வெள்ளம் காரணமாக ரயில் நிலையங்களுக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. எனவ, ராயனபாடு, கொண்டப்பள்ளி, தெனாலி, விஜயவாடா, நிடுப்ரோலு மற்றும் பாபட்லா ரயில் நிலையங்களில் சிக்கி தவித்த 6,000 பயணிகளுக்கு காலை உணவு மற்றும் குடிநீர் விநியோகிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வெள்ளம் காரணமாக ராயனபாடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் சிக்கியிருந்த பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. மட்டுமல்லாது ராயனாபவுட்டில் இருந்து விஜயவாடாவிற்கும், கொண்டப்பள்ளியிலிருந்து விஜயவாடாவிற்கும் 84 பேருந்துகள் ரயில்வே சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பயணிகள் மீட்கப்பட்டிருக்கின்றனர்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்பதால், பேரிடர் மீட்பு படையினர் முன்னெச்சரிக்கையாக இருக்கின்றனர். வெள்ளம் பாதிப்பு குறித்தும், மீட்பு பணிகள் குறித்து ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரிடம், பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்துள்ளார். அதேபோல, மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

விஜயவாடா - காசிபேட் இடையே தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் 21 ரயில்கள் ரத்து இன்று ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. சென்னை சென்ட்ரலிலிருந்து நேற்று புறப்படுவதாக இருந்த ஜெய்பூா் விரைவு ரயில், ஜிடி விரைவு ரயில், தமிழ்நாடு விரைவு ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. இன்று புறப்பட உள்ள தில்லி துரந்தோ விரைவு ரயில், அகமதாபாத் நவஜீவன் விரைவு ரயில், பிலாஸ்பூா் விரைவு ரயில்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தவிர, திருநெல்வேலி-பிலாஸ்பூா் விரைவு ரயில், திருவனந்தபுரம்-புதுதில்லி கேரளா விரைவு ரயில், மதுரை-சண்டிகா் விரைவு ரயில் உள்ளிட்டவை கூடூா், நெல்லூா், விஜயவாடா, வாராங்கல் வழியாக செல்வதற்கு பதிலாக ரேணிகுண்டா, காசிபேட், குண்டக்கல் வழித்தடத்தில் இயக்கப்படும். அதேபோல் கொச்சுவேலி-கோரக்பூா் விரைவு ரயில், ராமேசுவரம்-அயோத்தியா விரைவு ரயில் சென்னை வராமல் ரேணுகுண்டா வழியாக இயக்கப்படும். ரயில் சேவை மாற்றம் குறித்து பயணிகள் 044-25354995, 044-25354151 ஆகிய உதவி எண்களை தொடா்பு கொள்ளலாம் என தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+