16 பேர் மிஸ்ஸிங்.. உக்ரைனில் போரிட ரஷ்யா படைக்கு போன இந்தியர்களுக்கு நேர்ந்த கதி.. உடலாவது வருமா?
டெல்லி: ரஷ்யாவுக்காக உக்ரைனில் போரிட சென்ற 16 இந்தியர்கள் மாயமாகி உள்ளனர். அவர்களின் இருப்பிடம் பற்றிய விபரம் தெரியவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றி திமுக எம்பி தயாநிதி மாறன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு வெங்கடேசன் கேட்ட கேள்விக்கு மத்திய அரசு தந்துள்ள பதில் என்பது அனைவருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த போர் என்பது கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த போரை இன்னும் சில நாட்களில் மூன்றாவது ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையே தொடர்ந்து போர் உக்கிரமாக நடந்து வருகிறது.

உக்ரைன் நாட்டை ரஷ்யா படைகள் மொத்தமாக சிதைத்துவிட்டன. அதேபோல் உக்ரைன் படைகளும், ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் ரஷ்யா படை வீரர்களும் ஏராளமானவர்கள் பலியாகி உள்ளனர். இதனால் ரஷ்யா வெளியில் இருந்து போருக்கு ஆட்களை அழைத்து செல்கிறது.
வடகொரியாவில் இருந்து கிம் ஜான் உன் 10,000 படை வீரர்களை ரஷ்யாவுக்கு அனுப்பினார். அவர்கள் உக்ரைனுடன் போர் புரிந்து வருகின்றன. அதேபோல் பிற நாடுகளிலும் இருந்து இளைஞர்கள் ரஷ்யா படையில் சேர்ந்து போர் புரிந்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் இருந்தும் சிலர் ரஷ்ய படைகளில் இணைந்து உக்ரைன் மீது போர் புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் நாடாளுமன்றத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் மற்றும் மதுரை எம்பி சு. வெங்கடேசன் ஆகியோர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் சில கேள்விகள் கேட்டு இருந்தனர். ரஷ்ய ராணுவத்தில் எத்தனை இந்தியர்கள் உள்ளனர்? எத்தனை பேர் பலியாகி உள்ளனர்? எத்தனை பேர் நாடு திரும்பி உள்ளனர்? என்பது தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டது.
இதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் பதிலளித்துள்ளார். அதில், அரசிடம் இருக்கும் தகவலின்படி பார்த்தால் ரஷ்ய ராணுவத்தில் 18 இந்தியர்கள். இதில் 16 பேரின் இருப்பிடம் தெரியவில்லை. இதுபற்றி ரஷ்ய நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
மிஸ்ஸான நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சாரபில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. அதோடு அவர்களை விரைவில் விடுவிக்க வேண்டும் அல்லது இறந்தவர்களின் உடல்களை இந்தியாவிடம் வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்ய ராணுவம் சார்பில் உக்ரைனுக்கு எதிராக போரிட்டு வரும் 16 இந்தியர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை என்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
இதுதொடர்பாக சு வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அதோடு மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் தான் இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் இணைந்ததற்கு காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார். இதுபற்றி சுவ வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ரஷ்ய உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்தியர்களின் உயிர் இழப்பு, பாதுகாப்பு பற்றி நாடாளுமன்றத்தில் நானும், தயாநிதி மாறன் எம்பி எழுப்பிய கேள்விக்கு (எண் 903 / 07.02.2025) வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் அளித்துள்ள பதில் அதிர்ச்சி தருகிறது.
எவ்வளவு பேர் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்தார்கள், எத்தனை பேர் நாடு திரும்பி இருக்கிறார்கள், எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என்ற தகவல் அமைச்சர் பதிலில் இல்லை. 18 பேர் இன்னும் ரஷ்ய ராணுவத்தில் நீடிப்பதாகவும் அதில் 16 பேரின் இருப்பிடம் தெரியவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரஷ்ய நிர்வாகத்தின் உயர் மட்ட அளவிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் தொடர்ந்து பேசி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்திய வீரர்களின் பாதுகாப்பு, உடல்நலம், ராணுவத்தில் இருந்து விடுவிப்பு, தாயகம் திரும்புதல் ஆகியன பற்றி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். உயிரோடு இல்லாவிடில் அவர்களது சடலங்களை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சொல்லி இருப்பது நிலைமையின் கடுமையை விளக்குகிறது.
இந்தியாவில் இருந்து வெளி நாட்டின் ராணுவத்தில் போய்ச் சேருகிற நிலை வேதனைக்குரியது, அக்னிபாத் போன்ற நிரந்தரமற்ற அத்தக் கூலி முறைகளை நோக்கி நகர்ந்ததே இந்த அவல நிலைக்கு காரணம் எனக் கருதுகிறேன். அந்நிய நாடுகளின் எல்லைகளை காக்கும் பணியில் இந்திய இளைஞர்களின் உயிர்கள் அநியாயமாக பலியாவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மத்திய அரசு இப்போதாவது அக்னி பாத் முறையை திரும்பப் பெற வேண்டுமென்றும், வெளிநாடுகளின் ராணுவத்தில் போய்ச் சேரும் அவல நிலையை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.
-
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா!












Click it and Unblock the Notifications