கொடுமை.. பஸ்சிலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண்.. 30 நிமிடம் ஊசலாடிய உயிர்.. டிரைவர், கண்டக்டர் அராஜகம்

பஸ்ஸில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உச்சக்கட்ட கொடுமை ஒன்று தலைநகரில் நடந்துள்ளது.. கொரோனா இருப்பதாக சொல்லி, ஓடும் பஸ்சில் இருந்தே இளம்பெண்ணை தூக்கி வீசி உள்ளனர் கண்டக்டரும், டிரைவரும்.. இதில் அந்த பெண் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.. இந்த சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் கொந்தளிப்பில் ஆழ்த்தி வருகிறது.

தொற்று பீதி நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது.. எந்த அளவுக்கு உயிர் பயம் வருகிறதோ அந்த அளவுக்கு மனிதாபிமானமும் குறைந்து வருகிறது.

 19 year old delhi girl thrown out of bus on Agra expresshigh way

வைரஸ் பாதித்தவர்களை ஒதுக்குவதும், அவர்கள் இறந்ததும் சடலத்தை தூக்கி வீசுவதும் என்ற அக்கிரமம் நடந்து வருகிறது.. ரோட்டில் சும்மா மயக்கம் போட்டு விழுந்துவிட்டால்கூட அவர்களை தூக்கி விட யாரும் வருவது கிடையாது.

இந்நிலையில், டெல்லியில் ஒரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது.. ஷிகோகாபாத்திற்கு பஸ் ஒன்று போய் கொண்டிருந்தது.. அதில், அம்மாவும், அவரது 19 வயது அன்ஷிகா என்பவரும் பயணம் செய்தனர்.. இந்நிலையில் அந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் இருந்ததாக அந்த பஸ்ஸில் இருந்த பயணிகளுக்கு சந்தேகம் வந்துள்ளது.

உடனே அதை பற்றி கண்டக்டரிடமும், டிரைவரிடமும் சொல்லி உள்ளனர்.. இதனால் பதறி போன டிரைவர், கண்டக்டரும், யமுனா எக்ஸ்பிரஸ் ரோட்டில் பஸ்ஸை நிறுத்திவிட்டனர்.. அத்துடன், 2 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை பஸ்ஸில் இருந்தே வெளியே தூக்கி வீசினர்.. இதில் அந்த பெண் படுகாயமடைந்தார்.. ரத்தம் கொட்டியது.. அடுத்த 30 நிமிஷத்தில் அந்த இடத்திலேயே உயிரும் போய்விட்டது.

ஆனால் இந்த சம்பவம் மூடி மறைக்கப்பட்டுவிட்டது.. இப்போதுதான் விஷயம் கசிந்துள்ளது.. உடனடியாக டெல்லி மகளிர் ஆணையத்துக்கு தகவல் பறந்தது.. அந்த ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் உபி போலீசுக்கு புகார் தந்தார்.. ஆனால், போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை என்று தெரிகிறது.. அதனால் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை, என்று அவர்களிடம் ஸ்வாதி விளக்கமும் கேட்டுள்ளார்.

இதற்குபிறகு நேற்றுதான் இதை பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரும் மதுரா போலீசில் இதை பற்றி புகார் தந்துள்ளார்.. ஆனால் இது இயற்கையான மரணம் என்று போலீஸ்காரர்கள் சொன்னார்களாம்.. மேலும் எப்ஐஆர் பதிவு செய்யவும் மறுத்துள்ளதாக தெரிகிறது.. அதுமட்டுமல்ல, போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் மாரடைப்பு என்று தெரியவந்துள்ளதாக சொல்கிறார்கள். இருந்தாலும், மதுரா எஸ்எஸ்பி கௌரவ் குரோவர் வழக்கு குறித்து விசாரிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார்.

உயிரிழந்த பெண்ணின் அண்ணன் விபின் யாதவ், இதை பற்றி சொல்லும்போது, "என் தங்கச்சி உடம்பில் ஒரு போர்வையை மட்டும் போர்த்தி உள்ளனர்.. அதற்கு பிறகு அந்த போர்வையுடனேயே இழுத்து சென்று வெளியே தள்ளி விட்டுள்ளனர்.. அந்த நேரம் அதிகமான வெயில் இருந்தது.. அந்த வெயிலில் அவள் மேலும் சுருண்டுவிட்டாள்.

என் அம்மா எவ்வளவோ கெஞ்சியும், டிரைவரும், கண்டக்டரும் அவர் பேச்சை கேட்கவே இல்லை.. மத்தவங்களும் உதவி செய்ய முன்வரல.. என் தங்கச்சிக்கு உடம்பில் எந்த பிரச்சனையும், நோயும் இல்லை.. முன்னாடி ஒருமுறை கிட்னியில் கல் இருந்தது.. அதையும் சரி பண்ணிட்டோம்.. ஆரோக்கியமா இருந்தவள், எப்படி திடீர்னு சாக முடியும், நீங்களே சொல்லுங்க' என்று கண்ணீருடன் கேள்வி எழுப்புகிறார்... இந்த சம்பவம் டெல்லியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.. உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+