1984 கலவரத்தில் கொல்லப்பட்ட 2 சீக்கியர்கள்.. 34 வருட வழக்கில் உச்சநீதிமன்றம் பரபர தீர்ப்பு!
1984ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் கொல்லப்பட்ட இரண்டு சீக்கியர்கள் தொடர்பான வழக்கில் கொலையாளிகள் இருவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி: 1984ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் கொல்லப்பட்ட இரண்டு சீக்கியர்கள் தொடர்பான வழக்கில் கொலையாளிகள் இருவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது.
1984ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவருடைய பாதுகாவலரால் கொலை செய்யப்பட்டார். சீக்கிய பாதுகாவலர் அவரை கொலை செய்த காரணத்தால் நாடு முழுக்க சில அமைப்புகளும், இந்திரா காந்தி ஆதரவாளர்களும் கலவரம் செய்தனர்.
இந்த கலவரத்தில் 2800 பேர் இறந்ததாக அரசு ஆவணங்கள் கூறுகிறது. அதிகாரப்பூர்வமில்லாமல் 8000 பேர் வரை இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. டெல்லியில் மட்டும் 2100 பேர் இறந்தனர். இந்த கொலைகள் தொடர்பான ஒரு வழக்கில்தான் இன்று தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கொலை செய்தனர்
இந்த கலவரத்தின் போது ஹாதேவ் சிங், அவ்தார் சிங் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்களின் சகோதரர் சந்தோஷ் போலீசில் புகார் அளித்தார். நரேஷ் ஷ்ரேவாத் மற்றும் யாஷ்பால் ஆகியோர் கொலை செய்ததாக புகார் அளித்தார்.

வழக்கு தள்ளுபடி
ஆனால் 1994ல் இந்த புகாரில் போதிய ஆதாரம் இல்லை என்று டெல்லி போலீசால் வழக்கு க்ளோஸ் செய்யப்பட்டது. இதையடுத்து பல மேல்முறையீடுகள் இந்த வழக்கில் செய்யப்பட்டது. அதன்பின் இரண்டு வருடம் முன் இந்த வழக்கு சிறப்பு விசாரணை பிரிவிடம் மாற்றப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உண்மைதான்
ஹாதேவ் சிங், அவ்தார் சிங் ஆகியோர் நரேஷ் ஷ்ரேவாத் மற்றும் யாஷ்பால் மூலம் கொலை செய்யப்பட்டது உண்மைதான் என்று கண்டுபிடிக்கப்பட்டது. மண்ணெண்ணெய், கம்பு, கத்திகள் வைத்து இந்த கொலை செய்யப்பட்டுள்ளது. இந்த கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

தீர்ப்பு வந்தது
இந்த நிலையில் கடந்த 15ம் தேதி இந்த வழக்கில் நரேஷ் ஷ்ரேவாத் மற்றும் யாஷ்பால் இருவரும் கொலையாளிகள் என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்று தீர்ப்பின் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி யாஷ்பாலுக்கு தூக்கு தண்டனையும், நரேஷ் ஷ்ரேவாத்துக்கு ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு மிகவும் முக்கியமான வழக்கு என்பதால் உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே ராணுவம் நிறுத்தப்பட்டு இருந்தது. பெரிய அளவில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications