அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு வீடுகள்..பட்ஜெட்டில் உறுதியளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
டெல்லி: கொரோனா பெருந்தொற்று காலம் இருந்தால் கூட பிரதான் மந்திரி யோஜனா திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்டி தரப்படும் என்ற இலக்கை அரசு நெருங்கியுள்ளது என்றும், இந்த திட்டத்தின் கீழ் மேலும் 2 கோடி வீடுகள் கிராமப்புறங்களில் கட்டித்தரப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரானம் பட்ஜெட் உரையில் அறிவித்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. தற்போது 10-வது ஆண்டாக பாஜக ஆட்சியில் உள்ளது. அதன்படி, மத்திய பாஜக அரசு இன்று தனது 10-வது பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இரண்டாவது ஐந்தாண்டில் தாக்கல் செய்யும் கடைசி பட்ஜட் இது ஆகும். லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யபடும் பட்ஜெட் என்பதால் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தலுக்கு பின் அமையும் புதிய அரசு, அடுத்து முழு அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இடைக்கால பட்ஜெட் என்றாலும் கூட.. தேர்தலுக்கு முன்பான பட்ஜெட் என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு பட்ஜட் மீது உள்ளது.
2 கோடி வீடுகள்: வரிச்சலுகைகள், விலைகுறைப்புகள் பற்றி எதுவும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எகிறியிருந்தது. இந்த நிலையில்தான் சரியாக காலை 11 மணிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதில் முக்கியமாக, அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டி தரப்படும் என்று அறிவித்தார். இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட்டில் கூறியதாவது:-
கொரோனா பெருந்தொற்று காலம் இருந்தால் கூட பிரதான் மந்திரி யோஜனா திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்டி தரப்படும் என்ற இலக்கை அரசு நெருங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மேலும் 2 கோடி வீடுகள் கிராமப்புறங்களில் கட்டித்தரப்படும். பிரதான் மந்திரி யோஜனா திட்டத்தின் 70 சதவீதம் பெண்கள் பயன்பெற்றுள்ளனர். வீடுகளில் சோலார் பேனல்கள் வைப்பவர்களுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா: இதனால் ஆண்டுக்கு 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை மக்களுக்கு மிச்சமாகும். மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் என்பது ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கும் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் 60% மத்திய அரசு நிதி 40% விழுக்காடு மாநில அரசு நிதி என்ற விகிதத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஊரக பகுதியில் வீடுகள் இல்லாதவர்களுக்கும் மற்றும் பழுதடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டி தருவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
வீடுகள் கட்ட தேவையான நிலப்பரப்பு 269 சதுரடி இருக்க வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களுக்கு உள்ளது. சமூக பொருளாதார சாதி வாரியான கணக்கெடுப்பின் மூலம் வீடு இல்லாதவர்களை கண்டறிந்து அதன் மூலம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications