காசு மேலே காசு வருது.. போனை பாத்துக்கிட்டே இருங்க! நாளை அக்கவுண்டில் விழ போகும் ரூ.2000! யாருக்கு?
டெல்லி : மத்திய அரசின் சார்பாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 முறை தலா 2000 ரூபாய் என மொத்தம் 6 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் ரூ.20 ஆயிரம் கோடி நிதியை நாளை பிரதமர் மோடி விடுவிக்கிறார். இதுவரை 17 தவணை நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ள நிலையில், 18வது தவணையாக நாளை 2 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படவுள்ளது.
பாஜக அரசு அமைந்த பிறகு பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளும், மானியம், நிதி உதவி உள்ளிட்டவையும் ஜன் தன் வங்கி கணக்குகள் மூலமாக நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.

முன்னதாக தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டம் மூலம் ஆண்டுக்கு சுமார் 6000 ரூபாயை நான்கு மாத இடைவெளியில் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படுகிறது.
இந்த பிஎம் கிசான் திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த இந்த திட்டத்தின் மூலம் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி நேரடியாக தகுதியுள்ள விவசாய நிலங்களின் உரிமையாளர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் வர வைக்கப்படுகிறது. அந்த வகையில் இதுவரை 17 தவணைகளாக விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் 2000 ரூபாய் நிதி உதவி வரவு வைக்கப்பட்டுள்ளது.
கடைசியாக கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 17ஆவது தவணை பிஎம் கிசான் நிதியை விடுவித்தார். இந்த நிலையில் இந்த ஆண்டு பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பதினெட்டாவது தவணை நிதி உதவியை பிரதமர் நரேந்திர மோடி நாளை விடுவிக்கிறார். சுமார் 20000 கோடி நிதி நாளை விடுவிக்கப்படும் நிலையில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இதற்காக விவசாயிகள் ekysஐ நிறைவு செய்திருக்க வேண்டியது கட்டாயம். இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் விவசாயிகள் அருகில் உள்ள சிஎஸ்இ மையங்களை தொடர்பு கொள்ளலாம். இதற்காக பிஎம் கிசான் சம்மன் நிதியின் https://pmkisan.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பயனாளிகளின் தங்கள் நிலையை அறியலாம். தொடர்ந்து உங்கள் ஆதார் எண் அல்லது பிஎம் கிசான் திட்ட எண்ணை கொடுத்தால் உங்களது தரவுகளை பெற்றுக் கொள்ளலாம்/ தொடர்ந்து பயனாளியின் நிலை மற்றும் கட்டண நிலை குறித்து சரிபார்த்துக் கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல் பிஎம் கிசான் மொபைல் அப்ளிகேஷன் மூலமும் பயனாளிகள் தங்கள் நிலையை அறிந்து கொள்ளலாம். கூகுள் பிளே ஸ்டோரில் பிஎம் கிசான் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து, ஆதார் எண் பதிவிட்டு ஓடிபி உள்ளீடு செய்தால் டேஷ் போர்டில் பயனாளிகள் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம். மேலும் மற்ற விவரங்களையும் இந்த அப்ளிகேஷனை தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவசாயிகள் தங்கள் மொபைல் எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் சரியாக உள்ளதா என்றும் சரிபாத்துக் கொள்ள முடியும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications