டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதை செய்தால்தான் பாஜகவை சமாளிக்க முடியும்.. மீண்டும் சேரும் எதிர்க்கட்சிகள்.. முக்கிய திட்டம்!

பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றாக கூடி மீண்டும் பெரிய மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜகவை எதிர்த்து மீண்டும் சேரும் எதிர்க்கட்சிகள், முக்கிய திட்டம்!- வீடியோ

    டெல்லி: பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றாக கூடி மீண்டும் பெரிய மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். பல திட்டங்களை மனதில் வைத்து இந்த ஆலோசனையை நடத்த உள்ளனர்.

    கடந்த மாதம் வரை வெளியான கருத்து கணிப்புகளில் எல்லாம் தேர்தல் முடிவுகள் குறித்து ஒரே விஷயம்தான் கூறப்பட்டது. அதன்படி, லோக்சபா தேர்தலில் தொங்கு நாடாளுமன்றம் உருவாகும். யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்று கூறப்பட்டது.

    இதனால் எதிர்க்கட்சிகள், மாநில கட்சிகளின் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவர்களே ஆட்சியை பிடிக்க முடியும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது அரசியல் சூழல் வெகுவாக மாறி இருக்கிறது.

    தேர்தல் களம் சூடு பிடித்தது... நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி தேர்தல் களம் சூடு பிடித்தது... நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி

    என்ன சூழல்

    என்ன சூழல்

    இந்த மாதம் முழுக்க தீவிரவாத தாக்குதல், இந்திய ராணுவம் பதிலடி, பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதல் என்று நாடு மொத்தமும் பரபரப்பாக இருந்தது. இந்த பிரச்சனை எதோ ஒரு வகையில் பாஜகவிற்கு தேர்தலின் போது உதவும் என்கிறார்கள். தேர்தல் நேரத்தில் பாஜக இந்த தாக்குதலை கூறி பிரச்சாரம் செய்யும், வாக்கு கேட்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மோடி பேசுகிறார்

    மோடி பேசுகிறார்

    அதேபோல்தான் பிரதமர் மோடியும் தற்போது அனைத்து மேடைகளிலும் இதை குறித்துதான் பேசுகிறார். கன்னியாகுமரி, அமேதி, அஹமதாபாத், பாட்னா என அனைத்து மேடைகளிலும் இவர் இதை குறித்துதான் பேசிக்கொண்டு இருக்கிறார். அபிநந்தன் தொடங்கி சர்ஜிக்கல் ஸ்டிரைக் வரை முக்கியமான விஷயங்களை மட்டுமே அவர் பேசுகிறார்.

    என்ன செய்ய போகிறது எதிர்க்கட்சிகள்

    என்ன செய்ய போகிறது எதிர்க்கட்சிகள்

    இந்த நிலையில்தான் மோடியின் இந்த செயலுக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்று தெரியாமல் எதிர்க்கட்சிகள் குழம்பிப் போய் இருக்கிறார்கள். தேர்தல் பிரச்சாரம் முழுக்க இந்த ராணுவ தாக்குதலே ஆக்கிரமித்து இருந்தால், பாஜக கண்டிப்பாக பெரும்பான்மை பெற்றுவிடும். இதனால் பாஜகவிற்கு எதிராக கடுமையான வாதங்களை வைக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்து இருக்கிறது.

    இணைய முடிவு

    இணைய முடிவு

    இதையடுத்துதான் தற்போது எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து மீண்டும் ஆலோசனையும், பொதுக்கூட்டமும் நடத்த இருக்கிறார்கள். இந்த வார இறுதியில் இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்று கூறுகிறார்கள். ஆலோசனையை தொடர்ந்து பெரிய பொதுக்கூட்டம் ஒன்றும் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

    இணைய வாய்ப்புள்ளது

    இணைய வாய்ப்புள்ளது

    இதில் உத்தர பிரதேசத்தில் உள்ள சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும் இணையும் என்று கூறுகிறார்கள். காங்கிரஸ் உள்ள மெகா கூட்டணியில் இந்த இரண்டு பெரிய கட்சிகளும் இணையவில்லை. பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி இரண்டும் தனியாக கூட்டணி அமைத்து உத்தர பிரதேசத்தில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் இவர்கள் இருவரையும் சமாதானம் செய்து, இந்த ஆலோசனையில் கலந்து கொள்ள வைக்க போகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

    யார் எல்லாம்

    யார் எல்லாம்

    எதிர்க்கட்சிகள் நடத்த போகும் இந்த மாநாட்டில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், மஜத, பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி, தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், பியூ ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் ஒன்றாக சேர்ந்து ஆலோசிக்க இருக்கிறது, என்று கூறுகிறார்கள்.

    English summary
    2019 Lok Sabha election: The Opponents are ready to come togeather again to Face BJP with new plans.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X