டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2024- தேர்தலிலும் நீங்கதான் ஜெயிக்கணும். . பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு அனுப்பிய பாகிஸ்தான் சகோதரி!

Google Oneindia Tamil News

டெல்லி: ரக்‌ஷா பந்தனையொட்டி, பாகிஸ்தான் பெண் ஒருவர், ''2024-ம் ஆண்டு தேர்தலிலும் நீங்க தான் வெற்றி பெறுவீர்கள்'' என்ற வாழ்த்துடன் இந்திய பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு மற்றும் வாழ்த்து அட்டை அனுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்த பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

ரக்‌ஷா பந்தனையொட்டி, சகோதர பாசத்தை காட்டும் வகையில் பெண்கள் தனது சகோதரனுக்கும், ஆண்கள் தனது சகோதரிக்கும் மணிக்கட்டில் ராக்கி எனப்படும் மஞ்சள் கயிற்றினை கட்டுவர். மேலும் அவர்களுக்கு சர்ப்ரைசாக பரிசுகளும் வழங்குவர்.

மன்னிப்பு கேட்காதீங்க.. நீங்கள் கொண்டாடப்பட வேண்டியவர்.. வருத்தப்பட்ட பூஜாவை.. தேற்றிய பிரதமர் மோடி மன்னிப்பு கேட்காதீங்க.. நீங்கள் கொண்டாடப்பட வேண்டியவர்.. வருத்தப்பட்ட பூஜாவை.. தேற்றிய பிரதமர் மோடி

 பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு

பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு

சகோதரத்துவத்தை விளக்கும் பண்டிகையாக கொண்டாடப்படும் இந்த நாளில் தங்கள் சகோதரிகளுக்கு பணம், நகைகளை கொடுத்து வாழ்த்துவர். இதேபோல் பெண்களும் தங்களால் முடிந்த பரிசுகள் கொடுத்து சகோதரன் கையில் கயிறு கட்டுவர். அந்த வகையில், பாகிஸ்தான் சகோதரி ஒருவர் தொடர்ந்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு மற்றும் வாழ்த்து அட்டை வழங்கி ரக்‌ஷா பந்தனை கொண்டாடி வருகிறார். பிரதமர் மோடியும் அந்த சகோதரி வழங்கும் கயிறுகளை கட்டிக்கொண்டு பாகிஸ்தான் சகோதரிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறது.

 ஆரம்பத்தில் இருந்து. .

ஆரம்பத்தில் இருந்து. .

பாகிஸ்தானைச் சேர்ந்த குவாமர் மோசின் ஷேக் என்ற பெண் தான் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருறார். குவாமர் மோசின் ஷேக் என்ற பெண் பாகிஸ்தானை சேர்ந்தவராயினும், திருமணம் முடிந்தபின் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் குடிபெயர்ந்தார். அகமதாபாத் நகரில் வசித்து வரும் அவர் பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்ததில் இருந்தே ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு ராக்கி கயிறு அனுப்பி வருகிறார். தொடர்ந்து மோடி குஜராத் முதல்வர் ஆன பின்னரும் ரக்‌ஷா பந்தனையொட்டி வாழ்த்து அட்டை மற்றும் கயிறு வழங்கி வந்தார் .

 மோடிக்கு ராக்கி கயிறு

மோடிக்கு ராக்கி கயிறு

தற்போது பிரதமராக பதவியேற்ற பின்னரும் குவாமர் மோசின் ஷேக் மோடிக்கு வாழ்த்து அட்டை மற்றும் ராக்கி கயிறு அனுப்பி கொண்டு தான் இருக்கிறார். தபால் மூலம் அனுப்பும் அவருக்கு பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்து வருகிறார். அந்த வகையில், தற்போது வருகிற 12-ந் தேதி ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்பட இருப்பதால் அதையொட்டி, குவாமர் மோசின் ஷேக் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த ஆண்டும் ராக்கி கயிறை அனுப்பியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் வருகிற 2024- ஆம் ஆண்டு தேர்தலிலும் பிரதமர் மோடி வெற்றி பெற விருப்பம் தெரிவித்து வாழ்த்து கடிதத்தையும் அவருக்கு அனுப்பியுள்ளார்.

 ஒவ்வொரு முறையும் மோடியே பிரதமராக வேண்டும்

ஒவ்வொரு முறையும் மோடியே பிரதமராக வேண்டும்

இது குறித்து குவாமர் மோசின் ஷேக் மேலும் கூறுகையில், "இந்த ஆண்டு பிரதமர் மோடி எப்படியும் நேரில் சந்திக்கும் வாய்ப்பை எனக்கு கொடுப்பார் என்று நம்புகிறேன். இந்த சந்திப்புக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டேன். ரேஷ்மி ரிப்பனை கொண்டு நானே ராக்கி கயிறை தயாரித்துள்ளேன். பிரதமர் மோடி நீண்ட ஆயுள் மற்றும் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தித்தேன். 2024 ஆம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று பிரதமராக மீண்டும் மோடி தேர்வு செய்யப்படுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்ல. பிரதமர் மோடி இதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டவர் என்பதால் ஒவ்வொரு முறையும் அவரே பிரதமராக வேண்டும் என்பது எனது விருப்பம்" என்றார்.

English summary
On the occasion of Raksha Bandhan, a Pakistani woman sent a rakhi rope and a greeting card to Indian Prime Minister Modi with the wish, "You will win the elections in 2024 too".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X