அசத்திய தமிழக காவல் அதிகாரிகள்.. 23 பேர் சுதந்திர தின ஜனாதிபதி பதக்கத்துக்கு தேர்வு.. முழு லிஸ்ட்
டெல்லி: சுதந்திர தினத்தையொட்டி மெச்சத்தக்க சேவை பிரிவில் தமிழகத்தை சேர்ந்த 21 போலீஸ் அதிகாரிகளுக்கும், மிகச்சிறப்பாக பணியாற்றியதற்கான பிரிவில் தமிழகத்தை இருந்து 2 போலீஸ் அதிகாரிகள் என்று மொத்தம் 23 பேருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி காவல் துறை, தீயணைப்பு துறை, ஊர்க்காவல் படையினரின் சேவையை பாராட்டி 3 பிரிவுகளில் ஜனாதிபதி பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

வீரதீர சேவை, மிகச்சிறப்பாக பணி செய்தவர்கள், மெச்சத்தக்க சேவை என்ற 3 வகைகளில் ஆண்டுக்கு 2 முறை ஜனாதிபதி பதக்கம் என்பது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சுதந்திர தினத்ததையொட்டிஇந்த 3 பிரிவுகளில் இந்தியா முழுவதும் மொத்தம் 1,037 பேர் ஜனாதிபதி பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 23 போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இதில் மிகச்சிறப்பாக பணியாற்றியதற்கான பட்டியலில் மொத்தம் 2 தமிழக காவல் அதிகாரிகள் ஜனாதிபதி பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி காவல்துறை இயக்குநர் வன்னிய பெருமாள், ஏடிஜிபி அபின் தினேஷ் மோடாக் ஆகியோருக்கு மிகச்சிறப்பாக பணியாற்றியதற்கான ஜனாதிபதி பதக்கம் வழங்கப்பட உள்ளது.
அதேபோல் தமிழகத்தை சேர்ந்த 21 காவல் அதிகாரிகளுக்கு மெச்சத்தக்க வகையில் சேவையாற்றியதாக ஜனாதிபதி பதக்கம் வழங்கப்பட உள்ளது. அதன்படி ஐஜி கண்ணன், ஐஜி பாபு, காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினவு உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் எஸ்பிக்களான பெரோஸ் கான் அப்துல்லா, சுரேஷ் குமார், கிங்ஸ்லின், சியாமளா தேவி, பிரபாகர், பாலாஜி சரவணன் உள்ளிட்டவர்களுக்கும் மெச்சத்தக்க சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் வழங்கப்பட உள்ளது.
இவர்கள் தவிர கூடுதல் எஸ்பிக்களான ராதாகிருஷ்ணன், ஸ்டீபன், டிஎஸ்பிக்களான டில்லிபாபு, மனோகரன், சங்கு, இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சந்திர மோகன், ஹரிபாபு, தமிழ் செல்வி, சப் - இன்ஸ்பெக்டர்களான முருளி, ரவிசந்திசரன், முரளிதரன் உள்ளிட்டவர்களுக்கும் மெச்சத்தக்க சேவை பிரிவில் ஜனாதிபதி பதக்கம் வழங்கப்பட உள்ளது.
மேலும் ஒவ்வொரு முறை விருது அறிவிப்பின்போதும் தமிழகத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு துறை அதிகாரிகள் பட்டியலில் இடம்பெறுவார்கள். ஆனால் இந்த முறை அப்படி யாரும் இடம்பெறவில்லை இது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. அதேபோல் வீரதீர செயலாற்றியவர்கள் பிரிவிலும் தமிழகத்தில் இருந்து யாராவது ஒருவர் இடம்பெறுவார்கள். ஆனால் இந்த முறை அந்த பிரிவில் யாருடைய பெயரும் இல்லை. மாறாக மிகச்சிறப்பாக பணியாற்றியவர்கள், மெச்சத்தக்க வகையில் பணியாற்றியவர்கள் என்ற 2 பிரிவுகளில் மட்டுமே தமிழக போலீசார் பதக்கம் வாங்க உள்ளனர். என்பதும் வருத்தத்துக்குரியதாக உள்ளது.












Click it and Unblock the Notifications