Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிபிசி ஆவணப்பட சர்ச்சை.. சிறையில் ஜாமியா பல்கலை மாணவர்கள்.. விடுவிக்காததால் எஸ்எப்ஐ போராட்டம்!

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் 13 மாணவர்கள் கைது செய்யப்பட்டு 24 மணி நேரம் ஆன பின்னரும் விடுவிக்கப்படாததால் சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குஜராத் கலவரம் குறித்து பிபிசி இயக்கியிருந்த ஆவணப்படத்தை திரையிட முயன்றதாக டெல்லியின் 'ஜாமியா மிலயா இஸ்லாமியா' பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் 24 மணி நேரம் கடந்த பின்னரும் 13 மாணவர்கள் விடுவிக்கப்படவில்லை என்று இந்திய மாணவர் சங்கத்தினர் (SFI) குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் கோத்தராவில் ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இதனையடுத்து வெடித்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். 2,500க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இது இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கலவரம் நடந்தபோது அம்மாநில முதலமைச்சராக தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி பதவி வகித்திருந்தார்.

இந்நிலையில் இக்கலவரம் குறித்து இங்கிலாந்தின் பிபிசி செய்தி ஊடகம் ஆவணப்படம் ஒன்றை கடந்த 17ம் தேதி வெளியிட்டிருந்தது. இந்த ஆவணப்படம் இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது தடை செய்யப்பட்டுள்ளது.

மறுப்பு

மறுப்பு

இது ஒரு பிரசார படம் என்று மத்திய அரசின் அதிகாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே பேஸ்புக், டிவிட்டர் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் இந்த படத்தை திரையிடக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த படம் தொடர்பாக பகிரப்பட்ட லிங்குகளும் நீக்கப்பட்டு தடை செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில் மத்திய அரசின் தடையை மீறி ஆவணப்படத்தை திரையிடுவதாக மாணவர் சங்கத்தினர் கூறியிருந்தனர்.

தடை

தடை

அதேபோல கேரளாவில் சில கல்வி நிலையங்களிலும் ஹைதராபாத் பல்கலைக்கழகத்திலும் இந்த ஆவணப்படம் திரையிடப்படது. இதற்கடுத்து டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் இந்த திரைப்படம் திரையிடப்படும் என்று நேற்று முன்தினம் (ஜன.25) 'இந்திய மாணவர் சங்கத்தினர் (SFI)' கூறியிருந்தனர். இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்திருந்தது. இது தொடர்பாக பதிவாளர் வெளியிட்டிருந்த அறிக்கையில், "ஆவணப்படத்தை பல்கலை வளாகத்தில் திரையிட பல்கலை நிர்வாகத்திடமிருந்து எவ்வித முன் அனுமதியும் பெறப்படவில்லை.

 கற்கள் வீச்சு

கற்கள் வீச்சு

இவ்வாறான அங்கீகாரமற்ற செயல்பாடு பல்கலையின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர் குலைக்கும். எனவே சம்பந்தப்பட்ட மாணவர் குழு இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஆவணப்படம் திரையிடப்படக்கூடாது என்று அறிவுறுத்தப்படுத்தப்படுகிறார்கள். ஒரு வேளை இந்த உத்தரவை பின்பற்றவில்லையெனில், பல்கலைக்கழக விதிகளின்படி உரிய கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றும் கூறியிருந்தார். ஆனால் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாது மாணவர்கள் ஆவணப்படத்தை திரையிட்டனர். இதற்கிடையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அவர்கள் மீது கற்கள் வீசப்பட்டன.

24 மணிநேரம்

24 மணிநேரம்

இதனால் காயமடைந்த மாணவர்கள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, ஜேஎன்யுவை தொடர்ந்து ஜாமியா மிலியாவிலும் ஆவணனப்படம் திரையிடப்படும் என்று SFI மாணவர்கள் கூறியிருந்த நிலையில் பல்கலை நிர்வாகம் இதற்கு அனுமதி மறுத்திருந்தது. அதேபோல இந்த திரையிடலை தடுக்கும் நோக்கில் மாணவர்கள் பலரை காவல்துறையினர் நேற்று காலை கைது செய்தனர். இதனால் வகுப்புகள் நடக்காமல் முடங்கியது. இவ்வாறு கைது செய்யப்பட்ட மாணவர்களில் பலர் நேற்று மாலை விடுவிக்கப்பட்டாலும், 13 மாணவர்கள் மட்டும் காவல்துறையினர் விடுவிக்கவில்லை. இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+