கொரோனா: இத்தாலியில் தத்தளித்த 263 இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்- பரிசோதனை
டெல்லி: இத்தாலியில் தத்தளித்த 263 இந்தியர்கள் பாதுகாப்பாக இன்று காலை நாடு திரும்பினர். அனைவரும் கொரோனா பரிசோதனைக்காக கண்காணிப்பு மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Recommended Video
சீனாவை விட இத்தாலியில்தான் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 800 உயிர்கள் பலியாகி உள்ளன. இத்தாலியில் 5000 பேர் பலியாகி உள்ளனர்.

இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே இத்தாலியில் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தாயகம் திரும்ப முடியாமல் தத்தளித்து வந்தனர்.

இந்தியாவைச் சேர்ந்த 263 பேரும் ரோமில் விமானங்கள் இல்லாத நிலையில் தத்தளித்தனர். இதையடுத்து மத்திய அரசு ஏர் இந்தியா சிறப்பு விமானத்தை அனுப்பி இந்தியர்கள மீட்டு வந்தது. இவர்கள் அனைவரும் இன்று காலை டெல்லி வந்தடைந்தனர்.
The special Air India flight carrying 263 Indian students that took off from Rome landed at Delhi airport at 9.15 AM today. All 263 evacuees to be taken to ITBP Chhawla Quarantine Facility in Delhi, after thermal screening and immigration at the airport. #Coronavirus pic.twitter.com/KdgHOwXFlH
— ANI (@ANI) March 22, 2020
263 பேரும் வாகனங்களில் கோரோனா பரிசோதனை மற்றும் கண்காணிப்பு மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications