2 ஜி: ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிரான அப்பீல் வழக்கு - டெல்லி ஹைகோர்ட்டில் இன்று முதல் விசாரணை
2ஜி வழக்கு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் தினமும் விசாரணை நடைபெறவுள்ளது.
டெல்லி: 2ஜி வழக்கு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் தினமும் விசாரணை நடைபெறவுள்ளது.
2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா உள்பட 17 பேரை கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்து இருந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2018, மார்ச் 19ஆம் தேதி அமலாக்கப் பிரிவும், சிபிஐயும் தனித்தனியாக மேல்முறையீடு செய்தன. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி உயர் நீதிமன்ற பிரிஜேஸ் சேத்தி வரும் நவம்பர் மாதத்துடன் ஓய்வு பெறுகிறார்.
இந்த வழக்கில் சிபிஐ தரப்பு தனது வாதத்தை முடித்துக் கொண்டது. ஆனால், அதன் பின்னர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொடர்ந்து வழக்கை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த வழக்கில் ஆ.ராசா உள்ளிட்டோர் பதில் அளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, நவம்பர் மாதம் ஓய்வு பெற இருப்பதால், வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்தன.
இந்த மனு உயர் நீதிமன்றத்தில் கடந்த 10ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், நீண்டகாலமாக அரசின் செலவில் நடந்து வரும் இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், 2 ஜி மேல்முறையீட்டு மனுக்கள் அவசர வழக்காக, அக்டோபர் ஐந்தாம் தேதிமுதல் விசாரிக்கப்படும் என உறுதியளித்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications