டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆவேசம்.. கண்ணீர்.. நெகிழ்ச்சி.. ஒரே குரலில் 'எல்லைச்சாமிகளுக்கு' புகழ் வணக்கம் சொல்லும் இந்தியா

Google Oneindia Tamil News

Recommended Video

    ராணுவ வீரர் உடலை தோளில் சுமந்து சென்ற ராஜ்நாத்சிங் | Oneindia Tamil

    டெல்லி:புல்வாமா தாக்குதல், 45 ஜவான்களின் வீர மரணங்களுக்கு இடையே.. அவர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்ட போது நிகழ்ந்த நெகிழ்ச்சியான நிகழ்வுகள்.. நாம் இந்தியர் என்பதை பெருமை கொள்ள வைக்ககிறது.

    பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கங்கள், தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்ற அவா.. என ஆயிரக் கணக்கானோரின் குரல்களுக்கு இடையே... புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

    கட்டுப்படுத்த முடியாத கோபம், பாகிஸ்தானை ஏதாவது செய்தாக வேண்டும் என்ற வெறி, அதனை வலுப்படுத்தும் வகையிலான வீர முழக்கங்கள் ஆகியவை தான் புல்வாமா தாக்குதலின் முடிவாக... அனைத்து இந்தியர்களின் எண்ண ஓட்டங்களில் சென்று கொண்டிருக்கிறது.

    அத்தகைய ஒரு உணர்ச்சிப்பூர்வமிக்க.. பிரளயமான ஒரு சூழல் தான் நாடு முழுவதும் தற்போது எழுந்துள்ளது. காரணம்... 45 சிஆர்பிஎப் வீரர்களின் வீர மரணங்கள்.

    நெகிழ்ச்சியான தருணங்கள்

    நெகிழ்ச்சியான தருணங்கள்

    அவர்களின் உடல்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன்... அவரவர் மாநிலங்களுக்கு சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. வழக்கமான சம்பவங்கள் அல்லாமல்... அந்த உடல்களை பெறும் போது நிகழ்ந்த நெகிழ்வான சம்பவங்கள் தான்... நாம் எல்லோரும் இந்தியர் என்ற ஒற்றை புள்ளியில் இணைய வைக்கிறது என்பதை மறுக்க முடியாது.

    உத்தரப்பிரதேச வீரர்கள்

    உத்தரப்பிரதேச வீரர்கள்

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள திர்வா கனோஜ் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் குமார். அதே போல... உத்தரப்பிரதேசத்தின் உன்னோவ் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் குமார் ஆசாத். பெயரிலேயே விடுதலையை வைத்துள்ள அவரும்... பிரதீப்குமாரும் புல்வாமா தாக்குதலில் தன்னுயிரை தாய்நாட்டுக்காக அர்ப்பணித்தவர்கள்.

    முழங்கிய வீரவணக்கம்

    முழங்கிய வீரவணக்கம்

    அவர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு வந்தன. பூத உடல் அடங்கிய வாகனங்களின் இருபுறமும் திரண்ட ஆயிரக்கணக்கானோர் வீர வணக்கத்தை முழங்கியபடியே சென்றனர். வாகனத்தின் மேலே... நாட்டுக்ககான உயிரை தியாகம் செய்த வீரர்களின் புகைப்படமும், அதனையொட்டி தேசிய கொடியும் நாட்டப்பட... மெதுவாக அசைந்து வந்தது.

    முழக்கங்களுடன் மிதந்த வாகனம்

    முழக்கங்களுடன் மிதந்த வாகனம்

    அதே போன்று மற்றொரு வீரரான... அஜித்குமார் ஆசாத்தின் உடலும் வந்த போது.. வீர முழக்கங்களால் அப்பகுதியே விண்ணதிர்ந்தது. வீர இளைஞன் ஆசாத்துக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். அலைகடலாக... மக்கள் திரள்களுக்கு மத்தியில் அவர்களின் உடல்கள் தாங்கிய அந்த வாகனங்கள் மிதந்து வந்தன.

    தேசியக் கொடிகளுடன் மக்கள்

    தேசியக் கொடிகளுடன் மக்கள்

    தாக்குதலில் உயிரை தியாகம் செய்த மற்றொரு வீரரான... வாரணாசி தோபாபூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் யாதவின் உடலும் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்த போது காலை மணி 8.30. கைகளில் வழக்கமான நாளிதழ்களை வைத்துக் கொண்டு காட்சி தரும் அவர்களின் கைகளில்... அதற்கு மாற்றாக தேசியக்கொடியும்... நாட்டின் மீதான பக்தியும் இருந்தது. வீரன் சாவதில்லை... என்றுமே போற்றப்படுவான் என்று அவர்கள் ஒன்று திரண்டு முழக்கமிட... அப்பகுதியே உணர்ச்சி பிழம்பானது.

    எடுத்துக்காட்டாக அமைந்த நிகழ்வு

    எடுத்துக்காட்டாக அமைந்த நிகழ்வு

    மற்ற வீரர்களுக்கான அஞ்சலியை போல அல்லாமல்... யாதவின் இறுதி மரியாதை நிகழ்ச்சி.. ஒவ்வொரு இந்தியருக்கும் எடுத்துக்காட்டுவதாக இருந்தது. அவரது இறுதி மரியாதைக்கு முன்பாக... மகன் வைத்த கோரிக்கை.. அந்த பகுதி மக்களை சில்லிட வைத்தது.

    சொந்த ஊர் சேவை

    சொந்த ஊர் சேவை

    எனது தந்தைக்கு ஈமச்சடங்குகள், அரசு மரியாதை செய்வதற்கு முன்... தாம் வசிக்கும் கிராமத்துக்கு போதிய சாலை வசதிகளும்.. பெட்ரோல் விற்பனை நிலையம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    அறிவிப்பும், இறுதிச்சடங்கும்

    அறிவிப்பும், இறுதிச்சடங்கும்

    அதுவரை... இறுதி சடங்குகள் செய்யமாட்டோம் என்று அவர் உறுதியாக நிற்க.. ஊரே ஒன்று கூடி பெருமிதம் கொண்டது. பின்னர்... கோரிக்கை நிறைவேற்றப் படும் என்று மாவட்ட நிர்வாகமும், அமைச்சர் அனில் ராஜ்பரும் அறிவிக்க, அதன் பிறகே இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

    வசதிகளும்,கடமையும்

    வசதிகளும்,கடமையும்

    தாய்நாட்டுக்காக உயிர்துறந்த தந்தையின் உடல் ஒரு பக்கம்... மறு பக்கம் தமது ஊருக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற கடமை ஒரு பக்கம் என ... அவர்களின் சேவையை கண்டு ஊரே மெச்சியது. இதேபோன்று ஆக்ரா நகரை அடுத்துள்ள கேஹ்ராய் என்ற கிராமத்தில் வீரமரணம் அடைந்த கவுஷல் குமார் ராவத் உடல் வந்தது.

    எழுச்சி உரை

    எழுச்சி உரை

    அழுகுரல்கள், கண்ணீர் ஆகியவற்றுடன்.. பாகிஸ்தானுக்கு எதிரான முழக்கங்களும் விண்ணை பிளந்தன. ராவத்தின் 80 வயது தந்தை அந்த இடத்தில் எழுச்சி உரையாற்ற... அப்பகுதியே உணர்ச்சிமயமானது. பஞ்சாபில் ஜாய்மல் சிங், பீகாரின் ராடக் குமார் தாகூர், சஞ்சய் குமார் சின்ஹா ஆகியோரின் உடல்களுக்கு முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    எது நம்மை இணைக்கிறது?

    எது நம்மை இணைக்கிறது?

    தேசத்தின் ஒற்றுமை.. எல்லையில் துப்பாக்கிகளுடன் நின்றிருக்கும் நமது ஜவான்களிடம் மட்டுமல்லை... அவர்கள் பிறந்த ஊரின் மண்ணுக்கும் இருக்கிறது என்பதை தான் இந்த சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. கண்ணீர், கோபம், பாகிஸ்தானுக்கு எதிரான இந்த முழக்கம்... மூவர்ணங்கள் நமது தேசிய கொடியில் ஒன்றாக அமைந்திருப்பதை போல... ஒவ்வொரு இந்தியரையும் இணைத்திருக்கிறது என்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்... அதையும் தாண்டி... அவர்களுக்காக மட்டுமல்ல.. பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல.. உலக நாடுகளுக்கும் சொல்லலாம்... ஜெய்ஹிந்த்... !!

    English summary
    3 things unites India tears, anger and anti Pakistan slogan across the nation as the bodies of killed CRPF jawans arrive home one by one.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X