மதச் சடங்கை கடைப்பிடித்து மரணித்த ஐடி தம்பதியின் 3 வயது மகள்! ம.பியில் நடந்த சம்பவம்! பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் சந்தாரா என்ற மத சடங்கை கடைப்பிடித்து 3 வயது சிறுமி உயிர் துறந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. சிறுமியின் உடல் நிலை சரியாகாததால் ஐ டி தம்பதியினர் தன் மகளை ஜெயின் மதகுருவிடம் காட்டியுள்ளனர். இதையடுத்து அவர் கொடுத்த அறிவுரைப்படி சந்தாரா மத சடங்கை கடைப்பிடித்து சிறுமி உயிர் துறந்துள்ளார்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த 3 வயது சிறுமி, மத சடங்கை கடைபிடித்து உணவு எதுவும் உட்கொள்ளாமல் உயிர் துறந்துள்ளார். கடந்த மார்ச் 21 ஆம் தேதியே இந்த உயிர் துறந்த நிகழ்வு நடைபெற்றுள்ள நிலையில், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

3-year-old-girl-died-in-madhya-pradesh-after-taking-santhara-jain-ritual-of-voluntarily-giving-life

ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள் சந்தாரா Santhara என்ற மத சடங்கை கடைபிடிக்கிறார்கள். பொதுவாக வயதான காலத்தில் இதுபோன்ற மத சடங்கை கடைபிடித்து உணவு எதும் எடுத்துக்கொள்ளாமல் உயிரை துறப்பார்கள். ஆனால், 3 வயது சிறுமி இந்த கடுமையான முறையை பின்பற்றி உயிர் துறந்து இருப்பது நாடு முழுவதும் கவனம் பெற்றது.

கடந்த வாரம் சிறுமியின் பெற்றோரை ஜெயின் சமூகத்தினர் கவுரவித்தனர். அதன்பிறகு தான் 3 வயது சிறுமி வியனா ஜெயின் உயிரை துறந்த விஷயம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் பியூஸ் - வர்ஷா தம்பதி,. இருவருமே ஐடி துறையில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களது மகள் வியானா ஜெயின். செல்ல மகளான வியனா ஜெயினுக்கு மூளையில் கட்டி இருந்தது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிறுமிக்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்து இருக்கிறார்கள். ஆனால், உடல் நிலை குணம் அடையவில்லை.

பல லட்சம் செலவு செய்தும் சிறுமியின் உடல் நிலை சரியாகவில்லை. இதையடுத்து, இந்தூரில் உள்ள ஜெயின் மதகுருவை சந்தித்து உள்ளனர். இதையடுத்து, அவரது அறிவுறுத்தலை ஏற்று, சிறுமியை சந்தாரா மத சடங்கை கடைப்பிடிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஜெயின் மத முறைப்படி சந்தாரா செய்யப்பட்டுள்ளது. 10 நிமிடத்தில் இறந்துவிட்டார்.

ஏற்கனவே உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் உடனடியாக இறந்துவிட்டார் என்று தாயார் கூறினார். சிறுமியின் தந்தை கூறும் போது, "மகளின் உடல் நிலையை கருத்தில் கொண்டே சந்தாரா செய்தோம்" என்றார். மிகவும் இளம் வயதில் சந்தாரா எடுத்தவர் வியானா ஜெயின் தான் ஆவார். உலக சாதனை புத்தகமான கோல்டன் புத்தகத்திலும் அவரது இது பற்றிய தகவல் இடம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+