எதிர்ப்புகள் எதிரொலி- நாடாளுமன்றத்தில் 30 நிமிடம் மட்டும் கேள்வி நேரத்துக்கு அனுமதி
டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளால் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 30 நிமிட நேரத்துக்கு மட்டும் கேள்வி நேரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலால் நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

தற்போது வரும் 14-ந் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு மாற்றங்களும் இந்த கூட்டத் தொடரில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
அத்துடன் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இது ஜனநாயகத்துக்கு எதிரானது; அடிப்படை ஜனநாயக அரசியலுக்கும் எதிரானது என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து தற்போது நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 30 நிமிடம் நேரம் மட்டுமே கேள்வி நேரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் அமைச்சர்களிடம் இருந்து துறை சார்ந்த நேரடி கேள்வி பதில் இடம்பெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக பதில்களைப் பெறக் கூடிய கேள்விகளுக்குதான் நடப்பு கூட்டத் தொடரில் அனுமதி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications