குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் இல்லை! உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் உருக்கம்
டெல்லி: உத்தரகாண்ட் நிலச்சரிவு பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 30 தமிழர்களும் நேற்று டெல்லி திரும்பிய நிலையில் அவர்கள் பட்ட கஷ்டத்தை வேதனையுடன் தெரிவித்துள்ளனர். அதாவது நிலச்சரிவால் எங்கும் செல்ல முடியாமல் 8 நாட்களாக குடிப்பதற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் அவதிப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் தங்களை 4 மணி நேரத்தில் மீட்ட தமிழக அரசுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த வசந்தா (58), பிரேமாவதி (70), தமிழரசி (64), உமாராணி (61), அலமேலு கிருஷ்ணன் (73), பார்வதி (70), விஜயலட்சுமி (62), வாசுகி (60), குமாரி (61), பராசக்தி (75) உள்ளிட்ட 17 பெண்கள் உள்பட 30 பக்தர்கள், கடந்த 1ம் தேதி ஆன்மிக சுற்றுலா பயணமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஆதி கைலாஷ் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு சாலை மார்க்கமாக சென்றனர்.

ஆதி கைலாஷ் கோயிலுக்கு செல்வதற்கு முன்பே உத்தரகாண்ட் நகரத்தில் உள்ள பல்வேறு கோயிலுக்கு சென்றனர். உத்தகாண்டில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அங்குள்ள ஒரு மடத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஆதி கைலாஷ் கோயிலுக்கு வேனில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். மீண்டும் டெல்லி திரும்ப முடிவு செய்தனர்.
நேற்று முன் தினத்திற்கு முன் தினம் பித்தோரகர் மாவட்டம் அருகே சென்ற போது ஆதி கைலாஷ் பகுதியில் இருந்து 18 கி.மீ. தொலைவல் உள்ள தவாகாட் தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தவாகாட் பகுதியில் வந்த போது நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 30 பக்தர்கள் அதே இடத்திலேயே சிக்கித் தவித்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்படி சிதம்பரத்தில் உள்ள உறவினர்கள் நிலச்சரிவில் சிக்கியவர்களை காப்பாற்றும்படி கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசிற்கும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சிதம்பரம் மாவட்ட ஆட்சியர், பித்தோரகர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு அவர்களை பாதுகாப்பாக வைக்கும் படி கூறினார்.
இதையடுத்து உத்தரகாண்ட் போலீஸாரும் பேரிடர் மீட்பு படையினரும் அங்கு சென்று மீட்பு பணியை மேற்கொண்டனர். நேற்று முன் தினம் மழை விட்டதை அடுத்து தாவாகாட் கிராமத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். தொடர்ந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள டார்சுலாவுக்கு அனுப்பி அங்கு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.
டார்சுலாவில் இருந்து 30 பேரும் நேற்று டெல்லிக்கு வேனில் புறப்பட்டனர். இதையடுத்து இன்றைய தினம் விமானம் மூலம் சென்னைக்கு வந்துள்ளனர். அவர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லிச் செல்லும் வழியில் நிலச்சரிவில் இருந்து மீண்டவர்கள் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஆதிகைலாஷ் யாத்திரை மறக்க முடியாத பயணமாக அமைந்துவிட்டது. 8 நாட்களாக சரியான இருப்பிடமும் குடிப்பதற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் சிரமப்பட்டு வந்தோம்.
செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்தோம். உறவினர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்படிப்பட்ட சூழலில் நண்பர்கள், உறவினர்கள் மூலமாக தமிழக அரசை தொடர்பு கொண்டோம். நாங்கள் தகவல் சொல்லிய 4 மணி நேரத்திற்குள் எங்களை பத்திரமாக மீட்டனர்.
ஹெலிகாப்டர் மூலம் நாங்கள் வந்து சேர்ந்தோம். நேற்று முன் தினம் இரவு பித்தோரகர் எனும் இடத்தில் தங்கினோம். பிறகு தற்போது டெல்லிக்கு இரு வாகனங்களில் சென்றுவருகிறோம். 8 நாட்களை தாண்டி நாட்கள் சென்றுவிட்டதால் கையில் இருந்த பணமும் கரைந்து விட்டது. டெல்லியிலிருந்து சென்னை வருவதற்கும் அங்கிருந்து எங்கள் சொந்த ஊரான சிதம்பரத்தை அடைவதற்கும் முதல்வர் உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications