வெளிநாட்டு சொத்து விவரங்களை தாங்களாக முன்வந்து தெரிவித்த 30,000 பேர்! அரசு வரவேற்பு
டெல்லி: வெளிநாட்டில் குவிக்கப்பட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்து பலர் வெளியில் சொல்வது கிடையாது. இந்நிலையில் மத்திய அரசு மேற்கொண்ட விழிப்புணர்வு பிரசாரத்தையடுத்து ஏறத்தாழ 30,000 பேர் தங்களது வெளிநாட்டு சொத்து விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இது வரவேற்பை பெற்றிருக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதி இது தொடர்பான விழிப்புணர்வை SMS மற்றும் மெயில் வழியாக மத்திய அரசு தொடங்கியது. அரசின் முயற்சியால் தற்போது வரி செலுத்துவோர் தாங்களாக முன்வந்து விவரங்களை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவை பொறுத்தவரை நீங்கள் இந்த நாட்டின் குடிமகனாக இருக்கிறீர்கள் எனில், அரசுக்கு தெரியாமல் வெளிநாடுகளில் சொத்து வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். கறுப்பு பணம் தடுப்பு சட்டத்தின்படி (Black Money Act - 2015) வெளிநாட்டில் உள்ள சொத்துக்களை தெரியப்படுத்தாமல் இருந்தால் அதற்காக சிறை தண்டனையும் 300% அளவுக்கு அபராதமும் விதிக்கப்படும். வருமான வரி சட்டத்தின்படி (Income Tax Act - 1961) இந்த குற்றத்திற்காக உங்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருக்கிறது.
இந்த குற்றங்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். அல்லது, வெளிநாட்டு சொத்துகளை அந்நாட்டு அரசு பறிமுதல் செய்ய இந்திய அரசு அனுமதிக்கலாம்.
இவ்வளவு கடுமையான தண்டனைகள் இருந்தாலும் கூட, பலரும் வெளிநாட்டு சொத்துக்கள் குறித்த மூச்சு கூட விடுவதில்லை. காரணம், இந்தியர்களுக்கு வெளிநாட்டில் சொத்துக்கள் இருந்தால் அதற்கு வரி செலுத்த வேண்டும். இந்த வரிக்கு Capital Gains Tax என்று பெயர். 2 ஆண்டுகளுக்கு மட்டும்தான் அந்த சொத்து கையில் இருக்கும். பிறகு விற்றுவிடுவேன் என்றால் அந்த 2 ஆண்டுகளுக்கு 30% சதவிகித வரி விதிக்கப்படும். 2 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் சொத்துக்களுக்கு 20% வரி விதிக்கப்படும். அந்த சொத்தை வாடகைக்கு விடுகிறீர்கள் என்றாலும் அதற்கும் வரி செலுத்த வேண்டும்.
இதனால்தான் பலரும் வெளிநாட்டு சொத்துக்கள் குறித்து வாய் திறப்பதில்லை. எனவே மத்திய அரசின், மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) 'முதலில் நம்பிக்கை' எனும் விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்தது. அதாவது உங்களுக்கு வெளிநாட்டில் சொத்து இருந்தால் தானாக முன்வந்து சொல்லிவிட வேண்டும். இதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட மாட்டாது. ஆனால் நாங்களாக கண்டுபிடித்தல் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியிருந்தது.
இதனையடுத்து ஏறத்தாழ 30,000 இந்தியர்கள் தங்களுக்கு வெளிநாட்டில் ரூ.29,000 கோடி அளவில் சொத்து இருப்பதை தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "மத்திய அரசு மேற்கொண்ட பிரசாரத்தின் மூலம் 24,678 இந்தியர்கள் தாங்கள் செலுத்தியிருந்த வருமான வரி கணக்கில் திருத்தங்களை மேற்கொண்டிருக்கின்றனர். 5,483 கணக்கை தாமதமாக தாக்கல் செய்திருக்கின்றனர். அதில் ளெிநாடுகளில் சொத்துக்கள் இருப்பதை தெரிவித்திருக்கின்றனர்.
இந்த சொத்துக்கள் மூலமாக ரூ.1,089.88 கோடி அளவுக்கு கூடுதல் வருவாய் ஈட்டியிருப்பதையும் குறிப்பிடடிருக்கிறார்கள். கடந்த 2021-2022ம் ஆண்டில் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் மற்றும் வருவாய் குறித்த விவரங்களை தாங்களாக முன்வந்து தெரிவித்தோரின் எண்ணிக்கை 60,000 ஆக இருந்தது. இந்த ஆண்டு இது 2.31 லட்சமாக அதிகரித்துள்ளது" என்று கூறியுள்ளார்.
ஒருவேளை இந்த தகவல்களை வரி செலுத்துவோர் மறைத்திருந்தாலும் மத்திய அரசு கண்டுபிடித்துவிடும். பொது தகவல் பரிமாற்ற நடைமுறை (CRS) எனும் திட்டத்தில் இந்தியாவும் உறுப்பினராக இருக்கிறது. இந்த திடத்தில் உறுப்பினராக உள்ள நாடுகள், தங்கள் நாடுகளில் வெளிநாட்டினர் எவ்வளவு சொத்து வைத்திருக்கிறார்கள்? என்கிற விவரங்களை பகிர்ந்துக்கொள்ளும். கடந்த செப்டம்பரில் 108 நாடுகள் இந்தியாவிடம் இந்த தகவலை பகிர்ந்துக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications