சென்னப்பட்டணா உள்பட 31 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்.. விறுவிறு வாக்குப்பதிவு
டெல்லி: நாடு முழுவதும் இன்று 31 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் என்பது நடைபெற உள்ளது. இதில் கர்நாடகாவில் 3 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதில் சென்னப்பட்டணா தொகுதியில் மத்திய அமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் காலியாக உள்ள 31 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 10 மாநிலங்களில் உள்ள 31 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் என்பது நடைபெற உள்ளது.

அதன்படி ராஜஸ்தானில் 7, மேற்குவங்காளத்தில் 6, அசாமில் 5, பீகாரில் 4, கர்நாடகாவில் 3, மத்திய பிரதேசத்தில் 2, சத்தீஸ்கர், குஜராத், கேரளா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் தலா ஒரு தொகுதிகள் என்று மொத்தம் 31 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் பெரும்பாலான தொகுதிகளில் எம்எல்ஏவாக இருந்தவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்பியாகி உள்ளதால் இடைத்தேர்தல் என்பது நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் காலை 7 மணிக்கு விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு என்பது நடைபெற உள்ளது. பொதுமக்கள் காலை முதலே வரிசையில் நின்று ஓட்டளிக்க தொடங்கி உள்ளனர்.
இன்று நடக்கும் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிக கவனம் பெற்றுள்ள தொகுதிகளில் ஒன்று சென்னப்பட்டணா . இந்த தொகுதி என்பது கர்நாடகாவில் அமைந்துள்ளது. கர்நாடகாவில் ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தொகுதி எம்எல்ஏவா ஜேடிஎஸ் கட்சியின் தலைவர் குமாரசாமி எம்எல்ஏவாக இருந்தார். இவர் லோக்சபா தேர்தலில் மண்டியாவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து சென்னப்பட்டணா தொகுதியில் அவரது மகன் நிகில் குமாரசாமி பாஜக - ஜேடிஎஸ் கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
அவரை எதிர்த்து பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த சிபி யோகேஷ்வர் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். சென்னப்பட்டணா என்பது குமாரசாமி எம்எல்ஏவாக இருந்த தொகுதி. அதேபோல் ராமநகர் மாவட்டம் என்பது துணை முதல்வரும், கர்நாடகா காங்கிரஸ் தலைவருமான டிகே சிவக்குமாரின் சொந்த மாவட்டமாகும். இதனால் இந்த தொகுதியின் இடைத்தேர்தல் அதிக கவனம் பெற்றுள்ளது.
அதேபோல் ஹாவேரி மாவட்டம் சிக்கான் தொகுதி எம்எல்ஏவாக பாஜக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை இருந்தார். இவரும் லோக்சபா தேர்தலில் ஹாவேரியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் சண்டூர் சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் என்பது நடைபெற உள்ளது. ஓட்டுப்பதிவு காரணமாக அனைத்து தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?












Click it and Unblock the Notifications