அடைபட்ட கதவுகளுக்கு முன்னால்.. 32 ஆண்டுகால தாயின் பாசப் போராட்டம்! - இது அற்புதம்மாள் கதை
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி வழக்கில் 32ஆண்டுகள் சிறையிலிருந்த பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம். இது 32 ஆண்டுகாள பாசப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகவே தமிழகம் கொண்டாடுகிறது.
Recommended Video
களைத்துபோன முகம், கால்களில் ரப்பர் செருப்பு, கண்ணாடி, வெள்ளை முடி, தோளில் ஒரு பை, இதுதான் இந்த 2கே கிட்ஸ்க்கு அற்புதம்மாள் குறித்த அடையாளமாக இருக்கும். ஆனால், அதுமட்டும்தான் அவரா என்றால், நிச்சயம் இல்லை.
நீதிக்கான போராட்டம், 1991ல் ஜோலார்பேட்டையில் ஆரம்பித்த இந்த ஓட்டம், இப்போதும் நிற்கவில்லை, எப்படியாவது தன்னுடைய மகனை நிரபராதி என்று தீர்ப்புவர வேண்டும் என ஓடிக்கொண்டிருக்கும் தாயின் மனவுறுதி, போராடும் குணம், பாசம், எதற்கும் அஞ்சாத துணிவு இதுதான் அற்புதம்மாள்.

அற்புதம்மாள்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தன் மகன் கைது செய்யப்பட்டான் என்ற செய்தி கேட்டு 32 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதோ, முதல்முறையாக தன் மகனுக்கு ஜாமின் கிடைத்திருக்கும் மகிழ்ச்சியில் இருக்கிறார் அற்புதம்மாள். முதல் முறை பேரறிவாளன் பரோலில் வந்தபோது, அதைவிட ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியில் இருப்பார். விடுதலைக்கு பக்கத்தில் நெருங்கிவிட்ட திருப்தியும் அவரை சூழ்ந்திருக்கும். ஆனாலும், இதுமட்டும் போதாது அவருக்கு, மகனை நிரபராதி என்று நீதிமன்றம் சொல்லும்வரை இந்தத் தாயின் போராட்டம் தொடர்ந்துகொண்டு தான் இருக்கும்.

அறிவு எனும் பேரறிவாளன்
அன்பு, அறிவு, அருள் என மூன்று குழந்தைகள் மற்றும் கணவர் குயில்தாசனுடன் சந்தோஷமாகத்தான் சென்றது அற்புதம்மாளின் நாட்கள். சென்னை பெரியார் திடலில் தங்கி, பட்டயப்படிப்பு படித்துவந்தார் பேரறிவாளன். அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதும், பேரறிவாளனை சிபிஐ விசாரணைக்கு அழைத்தது. பெரியார் திடலில் தாய் அற்புதம்மாள் இருந்த பேரறிவாளனை போலீஸ் அழைத்து சென்றது. 'அறிவு இன்னும் சாப்பிடல, சப்பிட்டதும் அழைத்துப் போங்கள்' என்று போலீஸிடம் கேட்டபோதுதான் பேரறிவாளன் கடைசியாக சுதந்திரக் காற்றை சுவாசித்தது.

மல்லிகை
பேரறிவாளன் அழைத்து செல்லப்பட்டதற்கு மறுநாளில் இருந்து, அதாவது 1991 ஜூன் 12ம் தேதி தொடங்கியது, அற்புதம்மாளின் ஓட்டம். ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளின் தலைமை இடம் மல்லிகை. அங்கு வைத்து தான் பேரறிவாளனை விசாரித்தார்கள். மல்லிகையில் இருந்த மகனைப் பார்க்க, ஒவ்வொரு நாளும் அங்கு காவலில் இருந்த போலீஸிடம் கெஞ்சுவார், கதறுவார். ஆனால் யாருமே அவரை உள்ளேவிடவில்லை. ஒவ்வொரு நாள்ளும் கண்ணீரோடு தான் வெளியேறுவார் அற்புதம் அம்மாள்.

தாய்
பேரறிவாளன் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகு, தன் வாழ்க்கையே மாறியதாக குறிப்பிட்டுள்ளார் அற்புதம் அம்மாள். அதற்குமுன் சாதாரண பெண்ணாக, செளகர்யமாக, பாதுகாப்பாக வாழ்ந்திருந்த நான், சராசரி வாழ்க்கைக்கு தூக்கி எறியப்பட்டேன் என்கிறார். தனியான பயணம், மகன் குறித்த கேலிகளும் கிண்டல்களும் துரத்தும் போது, அதைத்தாண்டி நான் செல்ல வேண்டும் என முடிவெடுத்ததாகவும், இதையெல்லாம் கடக்க தன்னுடைய மகன் பேரறிவாளனின் முகம் தான் நினைவுக்கு வரும் என்றார் அற்புதம் அம்மாள்.

நீதிப் போராட்டம்
விசாரணைக்குப் பிறகு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார் பேரறிவாளன். அவரைப் பார்க்க வேண்டும் என்றால், அற்புதம்மாள் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்குவந்து, சிபிஐ அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி, மீண்டும் பூந்தமல்லி சென்று அங்கு காத்திருந்து மகனைப் பார்க்க வேண்டும். பல நாட்கள் பேரறிவாளனைப் பார்க்காமலேயே திரும்பிவிட்டார். அதன்பிறகு தொடங்கியது அற்புதம்மாளின் நீதிப் போராட்டம். அவர் ஏறாத நீதிமன்றம் இல்லை, போகாத ஊரே இல்லை. அந்த அளவுக்கு சட்டத்தை நம்பி தன்னுடைய போராட்டத்தை தொடர்ந்தார் அற்புதம்மாள்.

சிபிஐ அதிகாரி தியாகராஜன்
பேரறிவாளனுக்கான பாசப்போராட்டத்தில், முதல் வெற்றி பெற்ற இடம் முன்னாள் சிபிஐ அதிகாரி தியாகராஜனின் மனமாற்றம் தான். ஒரு தாயின் போராட்டம் என்ன செய்யும் என்றால், குற்ற உணர்ச்சியில் இருந்த அதிகாரியின் மனசாட்சியை தட்டி எழுப்பி, உண்மையை வெளிக்கொண்டுவரும். அற்புதம்மாளின் போராட்டம் அதைத்தான் செய்தது. பேரறிவாளனிடம் நடத்திய விசாரணையில், 'எனக்கு எதுவும் தெரியாது' என பேரறிவாளன் கூறியதை வாக்குமூலத்தில் தவிர்த்ததை சிபிஐ அதிகாரி தியாகராஜனே ஒத்துக்கொண்டார். கடமையில் இருந்து வழுக்கி இருக்கிறேன், இது என் தவறுதான் என தியாகராஜன் வாக்குமூலம் தந்தார்.

குற்றமும் தண்டனையும்
ராஜிவ் காந்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மகன் பேரறிவாளனுக்காக, அமைச்சர்கள், தமிழக முதல்வர்களை சந்தித்தார் அற்புதம்மாள். கோரிக்கைவைத்தார். எப்படியாவது மகன் வீடு வர வேண்டும் என்ற போராட்டம் தொடர்ந்துகொண்டே இருந்தது. தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது. அற்புதம் அம்மாளின் தொடர் போராட்டத்தால், பேரறிவாளன் உட்பட இந்த வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. இந்த வழக்கில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு தெரிவித்தது. தமிழக அரசு ஆளுநருக்கு மீண்டும் இதை பரிந்துரைத்தது. அதற்காக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி சொன்னார் அற்புதம்மாள்.

பரோல் - ஜாமின்
சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டதால், பேரறிவாளனுக்கு முதன்முறையாக பரோல் வழங்கப்பட்டது. அப்போது தனக்குப் பிடித்ததை, மகனுக்குப் பிடித்ததை ஆசை ஆசையாய் செய்து கொடுத்து பாசமாய் பார்த்துக்கொண்டார். 10ஆவது முறையாக பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டது. தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. 32 ஆண்டுகளுக்கு பிறகு பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. 32 ஆண்டுகளாக போராடிய இந்தத் தாயின் போராட்டத்துக்கு முதல் வெற்றி கிடைத்திருக்கிறது. நீதிக்கான இந்த தாயின் போராட்டம் கடைசி தீர்ப்பு வரை தொடர்ந்துகொண்டு தான் இருக்கும்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications